அடிப்படை அலகான அணுவிலிருந்து மிகவும் சிக்கலான அமைப்புடைய மனித மனம் வரைக்கும் ஒன்றைப்போலவே அச்சு அசலாய் இன்னொன்று அமையக்கூடிய சாத்தியக்கூறுகள் எதுவுமே இல்லாதது இந்த உலக வாழ்வு. சடப்பொருளானாலும் சம்பவமானாலும் அவ்வவற்றுக்கேயான ஒரு தனித்தன்மை நிச்சயம் உண்டு.
பகுத்தறிவு உள்ளவனான மனிதன் ஒரு விடயத்தை பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு பார்வையிலிருந்து விலகி வேறொரு கோணத்தில் யோசிப்பதில்லை என்பதற்கு சாட்சி, இப்போதுள்ள Facebook எதிர்வினைகள்.
மனிதாபிமானம் என்பதன் அதியுயர் எல்லையே, சக மனிதனுடைய அந்தரங்க தேவைகளையும் பிரச்சினைகளையும் அவற்றின் உண்மையான அர்த்தத்தோடு புரிந்து கொள்வது தான். ஆனால் நாம் பெரும்பாலும் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமலோ அல்லது மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டோ தான் வாழ்ந்து முடிக்கின்றோம்.
தத்தம் மனதின் ஆழம் வரை சென்று ஆராய்வதே வீணான, நேர விரயமான ஒரு காரியமாக பலர் நினைக்கையில், தான் சார்ந்தோரும் தன்னோடு எந்த நேரடி தொடர்புமில்லாத வழிப்போக்கருமான பலருடைய மனதின் ஆழம் வரை ஆராய்ந்து அந்த உணர்வுகளை பதிவு செய்திருக்கின்றது ரமா சுரேஷின் “உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81” சிறுகதை தொகுப்பு.
சிங்கப்பூர் சூழலில் பொதுமைப்படுத்தப்பட்ட பார்வைகள் இரண்டு உள்ளன. ஒன்று இங்கிருக்கும் வெளிநாட்டவர்கள் நினைக்கின்ற, ‘சிங்கப்பூரர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களை பிடிக்காது’ என்பது. மற்றது ஊரில் உள்ளவர்கள் நினைக்கின்ற, ‘சிங்கப்பூரில் டாலரில் புரளும் சீமான் வாழ்க்கை’ என்பது.
இந்த இரண்டையும் அப்படியே அடித்து தகர்த்தெறிந்து அவற்றுக்கான நியாயமான காரணங்களையும், உண்மை நிலையையும் ஆழ் மன விசாரங்களாய் மிகத் தெளிவாய் எடுத்துரைக்கும் கதைகள் இவை.
வார்த்தை வார்த்தையாய், வரி வரியாய் நிதானமாக விரும்பிப் படித்தேன். அத்துணை அழகு இந்த மொழி நடை.ஒவ்வொரு கதை படித்து முடிந்ததும், அதை மனதுக்குள் பல முறை அசைபோட வேண்டும் போல ஓர் ஆசை ஏற்பட்டது. சில மணி நேரங்கள் அந்த கதை என் சிந்தனையை சிறை பிடித்துக் கொண்டது.
மிகச்சிறப்பான கதை என்றால் அது “ஒரு இளங்குற்றவாளியின் சரித்திரம்” தான். இப்படி சரித்திரத்தின் அத்தனை எதிர்மறைகளையும் நேர்மறையான கோணத்தில் மாற்றிக் காட்டி வாழ்வின் எந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் முதலிலிருந்து வாழ்வை தொடங்கமுடியும் என்கின்ற நம்பிக்கையை தரும் அற்புதமான கதை.
“அபுமன்யூ” இந்த தொகுப்பின் முத்தாரம். இந்த கதையைப் பற்றிச் சொல்ல எனக்கு சொற்களே பிடிபடவில்லை. கதைகளும் கற்பனையும் கர்ப்பமும் எப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை என்பதை அந்த நிலையில் இருந்தவர்களால் மட்டும் தான் உணர முடியும்.
மாயா மட்டும் சற்று அதீதமான கற்பனையாக எனக்குத் தோன்றியது. கணவனிடம் அடியையும் வாங்கிக்கொண்டு காதலனுடனும் செல்ல வேண்டிய நிர்பந்தம் அந்த தாய்க்கு ஏன் இருக்கின்றது என்பதற்கான விளக்கம் இல்லை. தன் தேவைகள் குழந்தையின் மன நிலையையும் வாழ்வையும் பாதிக்கும் என்பதை யோசித்துப்பார்க்காத தாய் இருக்கமுடியாது அல்லது இருக்கக்கூடாது.
சிலகதைகளின் முடிவுகள் தெளிவாக இல்லை. இது கதைகளின் குறைபாடா அல்லது, என் வாசிப்பள குறைபாடா எனத் தெரியவில்லை. முதல் நிலை வாசகருக்கு சற்று குழப்பத்தை அவை ஏற்படுத்தக்கூடும்.
சமீப காலங்களில் நான் வாசிக்கின்ற அத்தனை கதைகள், கட்டுரைகள், கவிதைகள் (இந்த தொகுப்பு உட்பட)என அனைத்திலும் ஒருமை, பன்மை, தன்மை, முன்னிலை, படர்க்கை குழப்பங்கள் மிகுதியாக இருக்கின்றன. இவற்றை தவிர்க்க வேண்டும.
இனி செல்லும் வழி தோறும் நாம் சந்திக்கின்ற உணவங்காடி முதிய ஊழியர்கள், அரட்டை கும்பல், பிலிப்பினோ பணிப்பெண்கள், டிஸ்யு விற்கும் அங்கவீனமானோர், கட்டுமான ஊழியர்கள் அனைவரிலும் இந்த கதை மாந்தர்களின் ஏதோ ஒரு சாயலை நாம் தேடக்கூடும். இதுவரை அவர்களிடம் நாம் அசட்டை செய்த ஒரு பக்கத்தை அவதானிக்கவும் புரிந்து கொள்ளவும் கூடும். இதுவே இந்த தொகுப்பின் மிகப்பெரிய வெற்றி.
ஈற்றில் இலக்கியத்தின் இயற்கையும் தற்போது அதன் தேவையும், சக உயிர்கள் மீதான அன்பு தானே அன்றி வேறென்ன?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக