Little Lamb

ஒரு கால் விரல்கள் மறுபாதத்தின் நடுப்பகுதியை தொடுமாறு மாறி மாறி நடனம் ஆடியபடி

“அம்மா, மேலிலா, லித்தலாம் லித்தலாம் லித்தலாம் பாத்து போது”

‘என்ன? ஜெருசலேம், பத்லஹமா? பள்ளிக்கூடத்தில் ஏதேனும் கிறிஸ்தவப்பாடல்களை கற்றுத்தந்திருப்பார்களோ’

“அது என்ன பாட்டும்மா, அம்மாக்கு தெரிலயே”

“அம்மா, மேலிலா, லித்தலாம் லித்தலாம் லித்தலாம் பாத்து போது”

“அம்மாக்கு தெரிலம்மா, தெரிஞ்சா தானே போட முடியும்?.தொல்ல பண்ணாதீங்க அக்‌ஷரா”

சண்டை பிடித்து சலித்து மண்டை பிய்த்துக் குடைந்த நான்கு நாட்களுக்குப்ப்பிறகு ஒரு வழியாய் கண்டறிந்தாயிற்று.

Mary had a little lamb, little lamb, little lamb

March 24

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக