ஆப்பிளின் விதையும் தொலைபேசியும்

காலையில்,

அமைதியாய் இருந்த பேருந்துக்குள் டொக்கென்று ஒரு சத்தம். எல்லோரும் ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு அவரவர் தொலைபேசியில் மூழ்கி விட்டார்கள்.

“அம்மா, இங்க பாது, மாமா சோன் கீழ வீந்திச்சு அச்சசோ,,,,சோசோ..........மாமா கீய வீந்தது எடுக்கக்கூடாது தோத்தி, ஐக்கு, ச்சீசீசீ, உவ்வா....”


மாலையில்,

“புதா இங்க வா, பாப்பாகிட்ட வா, டேய், வாடா......அம்மா, இங்க பாது மைனா, அங்க பாது அங்க பாது அங்க பாது சித்துக்குவ்வி, ஹே குவ்வி, கீய வீந்தது சாப்டகூடாது no”

ஆப்பிளின் விதைக்கும் ஆப்பிளின் phoneக்கும் வித்தியாசமே இல்லாத அழகான உலகம் அவளுடையது.

கலைச்சொற்கள்
சோன் - phone
தோத்தி - Dirty
ஐக்கு - அழுக்கு
புதா - புறா
சித்துக்குவ்வி - சிட்டுக்குருவி


March 23

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக