#TLF2018
#தமிழ்மொழிமாதம்_2018
இலங்கையின் மத்திய மலை நாட்டின் தலை நகர் கண்டியைச் சேர்ந்த தலாத்தோயா என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த, இலங்கையில் வாழும் மூன்றாம் தலைமுறை இந்தியத் தமிழர் தர்ஷனா கார்த்திகேயன். இளங்கலை தகவல் தொழில் நுட்பவியல் பட்டதாரியான இவர் திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூரில் வசிக்கிறார்.
உங்களின் சிறு வயது பற்றிச் சொல்லுங்கள் ?
நான் பேசும் மொழி சார்ந்தும் , நான் வாழும் பிரதேசம் சார்ந்தும் என இருவகையான இனப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தது என் சிறுவயது.
இருப்பினும் அத்தனை பதற்றத்திலும் கூட இந்த இரு சாராரிலும் இருந்த அற்புதமான நண்பர்கள், அக்கறையுள்ள ஆசிரியர்கள், நல்ல அயலவர்களால் நிறைந்து, உலகில் யாருக்கும் கிடைத்திருக்கக்கூடியதை விட மிகச்சிறப்பாகவும், இனிமையாகவும், அர்த்தமுள்ளதுமாகவே என் குழந்தைப்பருவமும் இளமைப்பருவமும் இருந்தன.
வாசிப்பு எப்போது பழக்கமாகியது?
சரியாக நினைவிலில்லை. 5 வயதிருக்கலாம். அம்மா கதை சொல்லி, பின்பு படித்துக்காட்டி அதன் பின்பு நானாக வாசிக்கத்துவங்கினேன். அம்புலிமாமா, பாலமித்ரா மற்றும் கதை மலர் சித்திரக்கதைகள் மிகவும் பிடிக்கும் அப்போதெல்லாம். தேர்ந்த வாசிப்பு என்பது துவங்கியது ஒரு 12 வயதில் இருக்கலாம். எழுத்தாளரும் (வெகு)தூரத்து உறவினருமான கே.கணேஷ் தான் சாண்டில்யன், கல்கி போன்றோரை அறிமுகப்படுத்தினார். ஞாயிறு தோறும் தாத்தா வீட்டுக்கு போவதும் படித்த நூலைப் பற்றிப் பேசுவதும், இன்னொரு நூலை இரவல் பெற்றுக்கொண்டு வருவதும் தான் அந்த வயதில் மிகப்பிடித்த விஷயம். எனக்கு விவரம் தெரிந்த நாளாய், பேருந்துப்பயணம், நடை, உணவு, அம்மாவின் திட்டு அத்தனையும் புத்தகங்களோடு தான். இப்போது தான் நிறைய இடைவெளியை உணர்கின்றேன்.
உங்களுடைய எழுத்தை பிறர் பாராட்டியிருக்கிறார்களா?
நிறையவே. குறிப்பாக சிங்கப்பூரில் தான் அதிகம். ஆனால் அரிதாகவே கிடைக்கின்ற, குறைகளையும் இடித்துரைக்கும் நேர்மையான விமர்சனத்தைத் தான் நான் அதிகம் விரும்புகின்றேன்.
ஒரு பேப்பர் பேனா கொடுத்து கதை எழுதச் சொன்னால் முதலில் என்ன செய்வீர்கள்?
பிள்ளையார் சுழி போடுவேன்.
வாசிப்பின் அவசியம் ?
அப்படி கட்டாயம் எதுவும் இல்லை. தனி மனித விருப்பத்தெரிவு தான். ஆனால் சக மனிதரையும், இயற்கையையும் இந்த இரண்டோடும் இழைந்து நகரும் வாழ்க்கையையும் அதற்குத் தேவையான விழுமியங்களையும் புரிந்துகொள்ள வாசிப்பைத்தவிர வேறு எந்த வழியும் இல்லை.
வாசிப்பு எதை தந்தது ?
முதலில் சுவாரஸ்யத்தை, பின்பு போதையை, அதையடுத்து பகுத்தறியும் சிந்தனையை, பின் வந்த நாட்களில் வாழ்க்கைப் புரிதலை, அப்புறம் எழுதும் திறனை, மனக்குழப்பம் மிகும் சில நேரங்களில் தெளிவைப்பெறுவதற்கான ஒரு இடைவெளியை மற்றும் எப்போதும் ஆத்ம திருப்தியை.
எழுத விரும்புவது?
என் மன ஓட்டத்தை, தேவையான தணிக்கைகளோடு.
முதல் மேடை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
மிகச்சிறுவயதில் நிகழ்ந்தது அது. ஒரு மூன்று அல்லது நான்கு வயதில் ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சிக்காக. தற்போது நினைவு கூட இல்லை.
பேச்சு என்றால், பாடசாலையின் தமிழ் இலக்கிய மன்றத்தலைவியாக பதவியேற்ற, பாடசாலை பரிசளிப்பு விழாவில் வழங்கிய நன்றியுரை என்று நினைக்கின்றேன்.
எது உங்கள் வாழ்வை வழிநடத்துகிறது ?
தமிழ், சைவம், பரதநாட்டியம் என்னும் மூன்றும் தான் என் நிரந்தர நேசிப்புக்குரியவை. அதனாலேயே அவற்றில் சராசரிக்கும் சற்று அதிகமான தேர்ச்சியையும் விஷயஞானத்தையும் பெற்றிருக்கிறேன். இவை தான் என் வாழ்வை வழிநடத்துபவையாகவும் இருக்கின்றன. இவற்றால் நான் பெற்றது அதிகம். இழந்தது எதுவுமே இல்லை.
இப்போதும் பரதம் ஆடுவீர்களா?
ஆமாம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்.
ஞாபகத்தில் இருக்ககூடிய சிறுகதை ?
புதுமைப்பித்தனின் “சாப விமோசனம்”
பிடித்த ஒரு கவிதை ?
சைவ மதத்தின்
இரத்தம் குடித்து
அசைவம் ஆகிறான்
புத்தன்.
இலங்கையில் மட்டும் - யாழிசை மணிவண்ணன்.
பிடித்த சிறுகதை ?
அலிசா
காற்றிலிடைத் தூறலாக
பிடித்த சிறுகதை தொகுப்பு ?
வற்றா நதி
பிடித்த சிறுகதையாசிரியர் ?
வண்ணதாசன்
பிடித்த கவிதை தொகுப்பு ?
காலப்பெருவெளி
பிடித்த கவிஞர் ?
மகாகவி பாரதியார்
பிடித்த நாவல்?
ஆஷா பூர்ணா தேவியின் “முதல் சபதம்”
நேரடித் தமிழ் நாவல் என்றால் “பொன் விலங்கு”
பிடித்த நாவலாசிரியர்?
சாண்டில்யன்
பிறருக்கு கொடுக்க விரும்பும் பரிசு ?
அது ஆளைப்பொருத்தது
எழுத்தாளர்களுடனான உரையாடல் பற்றி ?
இப்போது வரை ஆக்கபூர்வமாகவே இருக்கின்றது. முன் முடிவுகளின்றி பரந்த மனதோடு வாசிக்கவும், இலக்கியத்தை புரிந்து கொள்ளவும் உதவுகின்ற எளிய வழி. இருப்பினும் அது எழுத்தாளரின் வித்யாகர்வத்தைப் பொருத்தும் இருக்கின்றது.
குழந்தைகளுக்கு கதைகள் சொல்வதுண்டா?
ஆமாம். என் குழந்தைக்கு சொல்கின்றேன்.
டீ பார்ட்டி யாருக்கெல்லாம் வைப்பிங்க?
என் பள்ளித் தோழிகளோடு, அவர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் சந்தித்து பல நாட்கள் ஆகின்றன.
என்னவாக ஆசைப்பட்டீர்கள்?
ஒரு நல்ல மகள், நல்ல தோழி, நல்ல மாணவி, நல்ல மனைவி, நல்ல அம்மா. அவ்வளவு தான்.
2018 புத்தாண்டு உங்களின் உறுதிமொழி என்ன?
கொஞ்சமேனும் அபுனைவுகளை வாசிக்கவேண்டும்.
இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகங்கள்?
காலையில் ஜீவகரிகாலனின் ட்ரங்குப் பெட்டிக் கதைகள், மாலையில் தி செராங்கூன் டைம்ஸ்.
நீங்கள் சந்திக்க விரும்பும் எழுத்தாளர்?
அவர்களும் விரும்ப வேண்டுமே
:)
நன்றி யாருக்கு சொல்வீர்கள்?
இன்றிருக்கும் "நான்" என்பதை உருவாக்கி செப்பனிட்டவர்கள் என்று நால்வரை சொல்வேன். அம்மா, என்னுடைய நடன ஆசிரியை, உடன் பிறவா அண்ணன், என் கல்லூரி பேராசிரியர் ஒருவர். பிறந்ததிலிருந்து தோளோடு துணையிருக்கும் தங்கைகள், நிபந்தனையில்லாத அன்புக்கு ஒரே அர்த்தமாய் அப்பா, நான் கூப்பிடும் குரலுக்கு செவிகளை எப்போதும் திறந்து வைத்திருக்கும் தோழிகள் ஏழு பேர், குறையே வைக்காத கணவர் , இந்த உலகில் எனக்கு எல்லாமுமாய் இருக்கும் குழந்தை. இவர்கள் அனைவருக்கும். நன்றி சொல்ல இந்த ஒரு வாழ்வு போதாது. வாழ்க்கை மிகவும் இனிமையானது !
April 16

:)நன்றி யாருக்கு சொல்வீர்கள்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக