மழலையும் மரமும்

"இந்த ஒரு தோசையை சாப்புட்டுடுங்க அம்மா"

" வேண்டாம்மா, பாப்பாக்கு பசிக்கல பாப்பாக்கு"

"ஒண்ணு தானேம்மா"

"வே...ண்டாம்மா, பீஸ், பாப்பாக்கு பிய்க்கல"

'அம்மா முடில போ'

"அக்ஷரா இங்க பாருங்க மாமரம்"

"வாவ், சுபத். மாமதமா, மாமழம் மாமழம், அயகான மாமழம்"

'அப்பாடா, ஒரு வாய் தோசை உள்ள போயிடுச்சு'

"ஆமாம் மா, அங்க பாருங்க, மாமரம் என்ன நிறம்"

"கீன் கலோ"

"பச்சை நிறம்"

"பச்சை நிதம்"

"இளம்பச்சை இலைகள்"

"இம்மச்சை இயைகள்"

"கடும்பச்சை இலைகள்"

"கம்பச்சை இயைகள் "

"அப்புறம் அந்த இலையில வேற ஏதோ நிறம் இருக்கு பாருங்க"

"ரெத் கலோ , எல்லோ கலோ"

"சிவப்பு, மஞ்சள்"

"செப்பு, மஞ்ஞல்"

"அது ஏன் மா அந்த இலையில மட்டும் வேற நிறம் இருக்கு"

"பாப்பாக்கு தெய்லயே"

"மரத்த பூச்சி கடிச்சிருச்சு அம்மு"

"பூச்சியா"

"ஆமாம்மா, பாவம்"

"புண்ணா?”

“ஆமாம்மா புண்ணு”

“அச்சச்சோ, வயிக்குமா"

"ம்ம்ம்ம். வலிக்கும்"

"பாவம் மதம். வயிக்கும்”

‘அப்பாடா, பாதி தோச காலி, ஒரு தோச ஊட்டுறதுக்குள்ள, நமக்கு மூச்சு வாங்கிடுது’

“ம்ம். பாவம்”

“பாப்பாக்கு வயிக்காது"

“பாப்பாக்கு வலிக்காது, மரத்துக்கு தான் வலிக்கும்”

“வயிக்குமா?, அச்சச்சோ.........மைந்து போதலாமா?”

“மருந்தா(😳😂), மரத்துக்கு எப்புடிம்மா மருந்து போடுறது”

“பாப்பா மைந்து போதலாம்”

“பாப்பா மருந்தா? அது எது?”

“ஒது, ஒது, ஒது, நாயக்கி பாப்பாக்கு பூச்சி கச்சுதுல? புண்ணு வஞ்சுல? அப்பா பாப்பாக்கு மைந்து போட்டு விட்டாங்க. சய்யா போச்சுல?”

“ஓ அன்னைக்கு அப்பா பாப்பாவுக்கு போட்டு விட்ட மருந்தா”

“ம்ம். அது”

“பாப்பா மருந்து போட்டா மரத்துக்கு எப்புடிம்மா சரியாப்போகும்”

“சய்யா போயிதும்மா, அதுவே சய்யா போயிதும்”

“(😂) சரி அப்புறம் போடலாம்”

“அம்மா மைந்து எதுத்துத்து வாங்க”

“மருந்து எங்க இருக்குனு அம்மாவுக்கு தெரியாதும்மா”

“அப்பாக்கு தான் தெய்யுமா”

“ம்ம் ஆமாம்”

“அப்பா வன்னோன்ன மைந்து போதலாம் சய்யா”

“ம்ம் சரி”

“அப்பா வன்னோன்ன மைந்து போதலாம் சய்யா”

“ம்ம்ம்”

“அப்பா வன்னோன்ன மைந்து போதலாம் சய்யாய்யாய்யாயா”

“சரிம்மா, அதான் சரின்னு சொன்னேனே”

“அப்பா வன்னோன்ன மைந்து போதலாம் சய்யாய்யாய்யாயா”

“சரிம்மா. அப்பா வந்தோன்ன மருந்து போடலாம்”

“மதம், அழுவாத, அப்பா வன்னோன்ன மைந்து போதலாம்ம்ம். சய்யா போயிதும். அதுவே சய்யா போயிதும் சய்யா”

‘யேஏஏஏஏ தோசைய ஊட்டிட்டேன்’

....………………

“அப்பா, மாமதத்துக்கு மைந்து போதலாம் வா”

“இங்க எங்கம்மா இருக்கு மாமரம்”

“பாப்பா காமிக்கேன் வா.........இங்க பாது மாமதம்”

“தர்ஷனா, இது மாமரமே இல்ல firstஉ”

‘ஆஆஆஆஆ,,,,,ஆனா எலய பாக்க மாவெல மாதிரி தானே இருக்கு, என்ன இப்புடி சொல்லுறாரு, எப்பிடியாவது சமாளிக்கணுமே’

“அது இருக்கட்டும். எத்தன தடவ உங்க கிட்ட சொல்லி இருக்கேன். ஒண்ணு தமிழ்ல பேசுங்க, இல்லன்னா ஆங்கிலத்துல பேசுங்க. ரெண்டையும் கலப்படம் செஞ்சு கொழந்தைய கொழப்பாதீங்க சரியா”

‘தப்பிசேண்டா சாமி’

April 8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக