அழகான உலகம்

“அம்மா, பே கவுண்ட் போலாமா”

“விளையாட்டுப்பூங்கா போகணுமா”

“ஆங், அதுஉ”

“சொல்லுங்க, விளையாட்டுப்பூங்கா”

“வெள்ளாத போலாமா”

“போலாம். ஆனா மழ பெய்யுதே, எப்புடி போறது”

“ம்ம் மழ பெய்துதா”

“ஆமாம்மா”

“சைட்லாம் நஞ்சிருக்குமா”

“ஆமாம்மா, சறுக்குமரம் எல்லாம் நனைஞ்சிருக்கும்”

“அம்மா பாது, சதுக்கு மதம் பாது”

“சறுக்கு மர ஆட்டம், உல்லாசம் இந்த ஆட்டம், சறுக்கி வந்த ராமையா, வழுக்கி விழுந்து சிரித்தார். பயந்து போன பிள்ளைகள் தாமும் சேர்ந்து சிரித்தன”

“பாப்பா வீந்துதுவேன். மழ பெய்துதுனா வெள்ளாத போகக்கூதாது no,. பாப்பா வீந்துதுவேன்”

“ஆமாம்மா. நாளைக்கு போலாம்”

“நாயைக்கு போலாமா, சதிம்மா. நாயைக்கு போலாம்............

தெயின் தெயின் கோ அவே,
கம் அகந்த அத வே
லித்லுலு,,,,
அக்‌ஷதா,,,,,
வான்ஸ்து பே
தெயின் தெயின் கோ அவே”

April 7

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக