தங்கத்துக்கு ஒரு தாலாட்டு

அழகின் அமுதே - என்
அக்‌ஷரா கண்ணே
அம்மா நான் அணைக்க
அன்னமே நீ உறங்கு

திங்களின் தங்கையே - நறும்
தென்றலின் தோழியே
தந்தையின் செல்வமே
தங்கமே நீ உறங்கு

கைகளே தொட்டிலாக - என்
கண்களே தாலாட்டாக
கனவுகளின் சுகத்தில்
கண்ணம்மா நீ உறங்கு

மனம் தன்னை வருடும் - சிறு
மாதுளை நகை விட்டு
மைவிழிகள் மூடி
மரகதமே நீ உறங்கு

பகலவன் ஒளிந்தது - அந்த
பால்நிலா ஒளிர்ந்தது
பனியிருள் சூழ்ந்தது
பட்டுப்பெண்ணே நீ உறங்கு.

February 21, 2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக