தோளில் போட்டு தட்டி
தாலாட்டு பாடி,
காலில் போட்டி ஆட்டி
கதைகள் சொல்லி,
பிரயத்தனப்பட்டு தூங்கவைத்து
படுக்கையில் பதமாய் கிடத்தி
பெருமூச்சு விட்டு ஒருவழியாய்
எழ எத்தனிக்கையில்,
பனி பட்ட மென்மடல்கள் அவிழ்த்து
பளிங்கு கண்களை உருட்டி விழித்து
தங்க மாதுளை வாய் திறந்து
முத்து முரசு முழுதாய் தெரிய
பட்டு நாக்கை நீட்டியபடி
தேவதையாய் சிரிக்கையில்
அச்ச்சோ எழுந்துவிட்டாயே என்று
ஆயாசப்படவா தோன்றும்???!!!
அள்ளிக்கொள்ளத்தோன்றுதடி என்
அழகிப்பெண்ணே !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக