அவள்,
நடக்கின்றாள், நகைக்கின்றாள் !
ஆடுகின்றாள், பாடுகின்றாள் !
ஓடுகின்றாள், உடைக்கின்றாள் !
எடுக்கின்றாள், எறிகின்றாள் !
கலைக்கின்றாள், கவிழ்க்கின்றாள் !
சிதறடிக்கின்றாள், சிரிக்கின்றாள் !
இருபதுகளில் இறுதியில் இருக்கும் எனக்கு
பதினைந்தே மாதம் நிறைந்த அவள்,
வாழ்க்கையின் விழுமியங்களை கற்றுத்தருகிறாள் !
பொறுமை பொறுமை என்று
மணிக்கொருமுறை உருப்போடுகிறேன் நான் !
குழந்தை வளர்ப்பு என்பது வெறும் அனுபவம் அல்ல,
கடினமான பரீட்சைகள் அடங்கிய குருகுலக்கல்வி !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக