இரும்பதிகாரத்திற்குப்பயந்து
இருட்டில் இருத்தியோர் அது,
மண்ணுக்குள்ளே மறைந்து
மக்கும்வரை பார்த்து
சுயம் காட்டினார்
பெரும்கூட்டம் மலிந்த
பிறழ்ச்சியில் களித்து
பசுஅணி புனைந்து
பகல் வேஷம் தரித்து
குள்ள தந்திர கூலிக்
கால்நடைகளானார்
பொதுமனம் அற்ற
மதிநலம் உற்றோர்
விதிஅது தன்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக