பள்ளியில் முதல் நாள்

Thank you Vasugi Nadarajah Sithirasenan akka for telling me to write one.

என்னுடைய 08.03.2017
~~~~~~~~~~~~~~~~~~

5.45 க்கு எழவேண்டியவள் அசந்துவிட்டு 6.15 க்கு அரக்கப்பறக்க எழுந்து அவசர அவசரமாக சமையல் முடித்து என் 'கண்'அவரை வழியனுப்ப வெளிவருகையில்,

நான் சமைக்காத நாட்களையோ, machine இல் கூட(!) துவைக்கப்போடாமல் ஒருபுறமும், இஸ்திரி போடாமல் இன்னொருபுறமும் குவிந்துகிடக்கும் துணிமூட்டைகளையோ புகார் சொல்லாமல் என் தனிமைக்கஷ்டங்களில்; தாளாமைக்காலங்களில் கண்ணின் மணியென கருத்தாய் கவனித்து தாங்கித் துணை நிற்கும் என் தாயுமானவனின் "happy women's day" என்ற வாழ்த்தில் அன்றைய நாளுக்கான முழு அர்த்தமும் கிடைத்தது 😊

அடுத்து இன்னுமொரு சுற்று அரக்கப்பறக்க அவசரஅவசரமாக தயார் செய்ய வேண்டியிருந்தது. மகளிர் தினம் அன்று அனுப்பவேண்டுமென தீர்மானித்திருந்ததால் #என்செல்லக்கண்ணம்மாஅக்‌ஷரா இன்று தன் பாடசாலை வாழ்வைத்துவங்கினாள். தலைவாரி பூச்சூட ஆசை இருந்தாலும் முடி இல்லாததால் சீருடை அணிந்து பொட்டுவைத்து சாமி கும்பிட்டு அவள் தயாரானபோது அத்தனை ஆனந்தம் எனக்குள்.

இந்தவயதில் பாடசாலை சுமையோ என்றொரு தயக்கமிருந்தபோதும் அங்கே ஆசிரியர்களுடனும் நண்பர்களுடனும் அவள் ஒன்றியதைப்பார்த்ததும் தான் இங்கிருக்கும் சூழலில் தனிமைதான் இந்த வயதில் தவறென்று தோன்றியதெனக்கு.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அன்று மாலையில் மகளிர்தினப்பரிசொன்றும் கிடைத்தது.

March 11, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக