பகீரதன் பலி



மார் மறைக்கும் துணி 
மறுக்கப்பட்ட
மங்கையர் 
மரபது !

திருக்கோயில்கள்
தவிர்த்த
தந்தையர்
திரளது !

மடச்சட்டங்களோடு
மானுடம் போர்தோடுத்து
மாற்றமொன்று
மலர்ந்தென்ன?

திராவிடம் தோன்றி 
தமிழகம் சற்று 
தப்பித்தென்ன?

கைமலம் அள்ளி
கழிவகற்ற நிர்ணயிக்கப்பட்ட
கலிக்கடலில்
கடும்வலியோடு நீந்தியும்,

கல்வியின் கரை தொட
கணநேரமும்
கரதூரமும் இருக்கையில்

மத மாற்சரியங்கள் கூடி
மறுபடியும்
மறுபடியும் 
மனிதத்தின் படகை
கவிழ்த்து 
கவிழ்த்து
மரணிக்கத்தானே செய்கின்றன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக