ஒருவனும்
ஒருவளும்
உருக்கொடுத்தார்கள்
கருக்கொண்டார்கள்
செருவுற்றார்கள் !
ஐந்திரண்டு திங்களும்
வாந்தி வலி பொறுத்தவர்
உந்தி வெளித்தள்ள
வந்துதித்தாள் அந்த
செந்தளிராள் !
பல நூறு கனவுகள்
பள்ளிக்கூட நினைவுகள்
பாட்டுப்பாடும் சிந்தனைகள்
பரதமாடும் எண்ணங்கள்
பட்டம் பெறும் காட்சிகள்
வண்ண வண்ணமாய் வளைந்தோடின
கண்ணிமைக்குள் !
மூவாறு கூட இல்லை
மிருகமொன்றின்
முகப்பு வால்
முட்டிச்சிதைத்ததில்
மலர்ந்து நிறைந்து
மணம் பரப்புமுன்
மாண்டு பறந்தது
மொட்டொன்று !
பாதுகாப்பு தரவும்
பாதகரை வேரறுக்கவும்
பிரயத்தனப்படவேண்டிய
பெரு மா(ந்)தர்
பணப்புகழுக்காக
பிரபலங்களை
பின்தொடருவதில்
பொழுதுபோக்க,
மேலுலகத்திலிருந்து
மகாகவி
மனம் பதறி
முகத்தில் உமிழந்தார் !!
பெற்றெடுத்த பெரும்செல்வம்
பரிதி தீண்டிய பனித்துளியாய்
பரிதவித்துப் போராடி
பேரிடரில் போகுமெனில்
பத்து மாதங்கள்
பொன்னைப்போல்
பொத்தி வைத்துத்
பிரசவிக்காமல்
பிஞ்சாயிருக்கையிலேயே
பைக்குள்ளேயே
பொசுக்கிப்
புறந்தள்ளி இருப்பேனே என
பேதைத்தாய் அங்கு
பொங்கி வெடிக்கையில்,,,
வேறெங்கோ
ஒருவனும்
ஒருவளும்
உருக்கொடுத்தார்கள்
கருக்கொண்டார்கள்
செருவுற்றார்கள் !
பாவச்சுகத்தின்
பாதையில் நெரிபட்டு
பலியாக
புண்ணியாத்மா ஒன்று
பூமி தொட்டது !
தார்மீகத்தராசு
தந்த நிகர்நிலை
தர்மத்தின் தராசிலொரு
புறம் தாழ்ந்தென்ன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக