காதல்

எழுதி
அழித்துத்திருத்தி
அடித்துத்திருத்தி
கசக்கி எறிந்து

மீண்டும்,

எழுதி
அழித்துத்திருத்தி
அடித்துத்திருத்தி
கசக்கி எறிந்து

மீண்டும்,
மீண்டும்,
மீண்டும்,
எழுதித்தீர்த்தும்

முற்றுப்பெறாமல்
ஒற்றை காகிதத்தின் 
ஓட்டைவழி
ஓழுகிப் போனதென் காதல் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக