அபத்தங்கள் !!!!


இறை நம்பிக்கையை 
மறுப்பதொன்றே 
அறிவென்ற மாயையை 
நிறுவவேன்றே

கடவுளை நம்புவோரின் 
கருத்தொவ்வொன்றயும் 
கரித்துக்கொட்டி பரிகசித்து 
கதைகதையாய் எழுதுமிவர்

பெரியாரை தந்தையென பீற்றித்திரிந்தாலும் 
பெண்ணொருத்தியின் ஆக்கச்செயல்கள் 
போலிகளால் புண்படுத்தப்படுகையில் 
பாராமுகமாயிருப்பரேயன்றி ஒற்றை 
பதிவேனுமிடமாட்டார்

ஆதாரம் வேண்டி 
அதிசயங்களை 
ஐயப்படுவோர் 
அநியாயங்களை 
அப்படியே ஏற்று 
அறிவியல் பேசுவர்

பொன்விழா கண்டு முடிந்த 
பொன்னியின் செல்வனில் கல்கி
பிராமணப்பெருமை பேசுவதாய் 
புறங்கூறிப் புலம்புவர்

எல்லாம் பணமுண்ணும் அரசியல் மயம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக