கொள்கைப் பரப்பு

பொய்யொன்று

இடையறாது, உரத்து
பரப்புரை செய்யப்பட்டு

நம்பகத்தன்மை மீதான
சந்தேகங்களுக்கு 
எதிர்கேள்வி கேட்கப்பட்டு

உண்மை மீது 
ஆதார விதண்டாவாதம் 
எழுப்பப்பட்டு

ஆங்காங்கே விஞ்ஞான 
சாயம் பூசப்பட்டு

நிறுவப்பட்டுவிடும் !!

நாளடைவில்
கொள்கையாக
கோட்பாடாகக் கூட மாறிவிடும் !!

காலப்போக்கில்
கூட்டமும் கூட்டிவிடும் !

நிர்பந்தங்கள்
நிரூபணங்கள்
நிறுவல்கள்
தேவைப்படாத
நிதர்சனமான உண்மை,

வசை மொழிக்கோ
வஞ்சப்புகழ்ச்சிக்கோ
வன்ம எள்ளலுக்கோ

நிலைகுலையாமல்
நின்ற இடத்தில்
நிர்ச்சலனமாய்
நிரந்தரமாய் 
நிற்கும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக