ஆதித்த கரிகாலனை கொன்றவர் யார்?
பல சரித்திர புதினங்களை தொடர்ச்சியாக எழுத வைத்த ஒரு முக்கியமான கேள்வி இது. திரையில் "ஏன்" என்ற கேள்வியை சுற்றித்தான் கதையை நீட்டிக்கலாம் என்றோ என்னவோ இயக்குனர் முதல் பாகத்தில் இப்படி நிறுத்தி இருந்தார்.
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?
சாண்டில்யன் கதைகள் படித்துத்தான் (இது போல கதைகள் தெலுங்கிலும் இருக்கக்கூடும்) இயக்குனர் இந்த திரைப்படத்தை எடுக்க யோசித்திருப்பாரோ என்று தான் எனக்கு தோன்றியது. அவர் எழுத்தில் பக்கம் பக்கமாய் வர்ணித்து என் கற்பனையில் விரிந்த, காலமெல்லாம் நான் பார்க்க ஆசைப்பட்ட பலவற்றை அப்படியே காட்சி வடிவமாய் பார்த்தால் அப்படித்தானே தோன்றும்?
அடேயப்பா ! கோட்டைகள், கொத்தளங்கள், அகழிகள், யுத்தங்கள், வியூகங்கள், கப்பல் ! ஒவ்வொன்றையும் வடிவமைக்க எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டும் ! இந்த முயற்சிக்கே உண்மையில் மனமார்ந்த பாராட்டுகளை சொல்லியாக வேண்டும்.
இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டி வந்ததால் இட்டு நிரப்பப்பட்ட காட்சிகள் அதிகம் என்றாலும் கூட மிகவும் அழகாக இருந்தன.
முதல் பாகத்தில் அருவி போல இதிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் அழகழகாய் இயற்கை காட்சிகள். பெரும்பாலும் கணினி வடிவமைப்பு தான். என்றாலும் கூட மிருகங்கள், கப்பல்காட்சி என்பன அவ்வளவு நுணுக்கமாக துல்லியமாக வடிமைத்திருந்ததால் ஏறக்குறைய தத்ரூபமாகவே இருந்தன.
சிவகாமி தேவியை ஒரு மகாராணிக்கு இருக்கவேண்டிய கம்பீரம் ஏற்றி அரியணையில் அமர்த்தியிருந்தார் பாருங்கள் அந்த சிருட்டி கர்த்தா ! ஆஹா ! வேறு எப்படி அமர்த்தி இருந்தாலும் இத்துணை கம்பீரம் மகாராணிக்கு நிச்சயம் இருந்திருக்காது. நேர்மைத்திறமும் கூர்மை அறமுமாய் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மகாராணி மிகச்சாதாரணமாய் முட்டாள்தனமாய் ஒரு முடிவு எடுப்பதாகக்காட்டி கொன்று விட்டார்கள் என்பதில் எனக்கு மிகவும் ஆத்திரம் தான்.
பெண்ணால் தான் போர்கள் என்று ராமாயணமும் மகாபாரதமும் போதாக்குறைக்கு சிவகாமியின் சபதமும் ஒரு வரைவிலக்கணத்தை நிறுவி நிலை நாட்டி வைத்த நேரத்தில் உடற்குறை உள்ள ஒரு ஆணின் தாழ்வு மனப்பான்மையும் அதனால் விளைந்த காழ்ப்புணர்ச்சியும் ஒரு மிகப்பெரிய பேரரசையும் கூட அழிக்க வல்லது என்றும் ஒரு குழந்தைக்கு தாய் மட்டுமல்ல தந்தையும் கூட நல்லவனாக அமைவது மிக அவசியம் என்றும் நிரூபித்த கதை சொல்லிக்கு வந்தனங்கள். (பெண்ணுக்காகத்தான் போர் நடந்தது என்பவர்கள் யாரேனும் இருந்தால் மீண்டுமொமொரு ஐந்தரை மணிநேரங்கள் செலவழித்து மொத்த திரைப்படத்தையும் பாருங்கள்)
எங்கேயும் தொய்வில்லாமல் ஆண்மையின் மேன்மை குன்றாமல் ஆசையின் அடிப்படை மாறாமல் அந்த கொடுங்கோல் அரசன் கதா பாத்திரம் காட்டப்படவேண்டியது மிக அவசியம். ஒரு கண்ணில் பார்வையற்ற ஒரு மனிதனா இத்தனை கம்பீரமாக ஆக்ரோசமாக நடிக்கிறான் என்று உண்மையிலேயே ஆச்சர்யமாய் இருந்ததெனக்கு. ஆயினும் கட்டப்பாவை அவன் தந்தை "நாயே" என்றும் அவனை "பல்லா" என்றும் அழைக்கையில் ஒரு புறம் ஒரே நகைச்சுவையாகவும் இன்னொரு புறம் பரிதாபமாகவும் இருந்தது.
கதைப்படி இரண்டு வீராங்கனைகள். வீரத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் ஒருத்தியின் நடனங்களில் காதலுக்குண்டான நளினம் இல்லை. காதலை சிறப்பாக வெளிப்படுத்தும் மற்றவளின் நடிப்பில் வீரத்தின் கம்பீரமே இல்லை. இருவகையிலும் செயற்கை.
ஆடையும் ஆபரணங்களும் அருமையோ அருமை. நெற்றித்திலகம் முதற்கொண்டு அத்தனை ஒப்பனையும் அட்டகாசமாக இருந்தது. அதிலும் தேவசேனையின் ஆடை ஆபரணங்கள் ! கண் கொள்ளாக்காட்சி ! மொத்த திரைப்படத்திலும் நான் மிகவும் ரசித்தது தேவசேனை கதா பாத்திரத்தைத்தான். அவருடைய ஆடை ஆபரண அலங்காரங்கள், வேட்டையாடும், போரிடும் திறம் எல்லாமே. கர்ப்பிணியாக வருகையில் கூட அந்த பாத்திரப்படைப்பு இயற்கையாக இருந்தது.
ஒரு அரசனுக்குரிய இலக்கணம் என்னவென்று எங்கோ படித்த ஞாபகம். இன்னின்ன என்பது தெளிவாக இல்லையென்றாலும் ஒரு சில நினைவில் இருக்கின்றன. மக்களால் விரும்பப்படுபவனாக, மக்களுக்காக எந்நேரமும் யோசிப்பவனாக, வாழ்பவனாக, மறமும் அறமும் நேர்மையும் அறிவும் மிக்கவனாக, அன்புள்ளம் கொண்ட இளவரசனாக, தாயை நேசிக்கும் மகனாக, சிறுவயது கனவுகளில் தோன்றும் ராஜ குமாரனாக, பெண்ணின் மானம் காக்கும் கனவானாக, பாசமிக்க கணவனாக, வீரமிக்க படைத்தலைவனாக, திறமையான ராசா தந்திரியாக, கம்பீரமான ஆண்மகனாக ஒரு அரசன் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும், இருக்கவும் வேண்டும் என்று தான் தோன்றியது. கடும் உழைப்பும் பயிற்சியும் அதன் பயனை அடைந்தது என்று தான் சொல்லவேண்டும். அதிலும் அந்த கையாயுதம் சுழற்றும் மிடுக்கு இருக்கிறதே !
உண்மையில் கதை தான் கொஞ்சம் ஏமாற்றம் அளித்து விட்டது. கணினி வடிவமைப்புக்கும் பிரம்மாண்டத்துக்கும் கொடுத்த கவனத்தை கொஞ்சம் கதையிலும் செலுத்தி இருக்கலாம். இப்படி ஒரு அற்பமான காரணத்துக்காகவா கட்டப்பா பாகுபலியை கொன்றிருப்பார்? கற்பனை கதையாக இருக்கும் பட்சத்தில் இன்னும் கொஞ்சம் அழுத்தமான கதையை எழுதி இருக்கலாம்.இவ்வளவு அநியாயமாக அபத்தமாக பாகுபலியையும் சிவகாமி தேவியையும் கொன்றிருக்க வேண்டாம்.
என்ன தான் காரண காரியங்கள் விளக்கப்பட்டாலும் தன் தந்தையை கொன்றவன் மீது மகனுக்கோ கணவனைக் கொன்றவன் மீது மனைவிக்கோ கோபமே வரவில்லையே? அத்தோடு போயும் போயும் ஒரு வீரனை முதுகிலா குத்தவேண்டும்? அதுவும் தானே வீரம் சொல்லித்தந்து வளர்த்த மகனை? இந்த இரண்டும் ஒவ்வாமையாகவே இருந்தது. இந்த காட்சிகளையும் கொஞ்சம் சிரத்தையோடு அமைத்திருக்கலாம் என்பது என் கவலை.
யுத்த தந்திரங்கள் மற்றும் சில சாகசங்கள் அபத்தமாக இருப்பதாகவும் உலக சினிமாக்களிலிருந்து காட்சிகள் பிரதி செய்யப்பட்டிருக்கின்றன என்றும் சிலர் சொல்லக்கேட்டேன். அவர்களுக்கு சரித்திரக்கதைகளோடு பரிச்சயம் இல்லையென்றே நான் சொல்வேன். பயிற்சியற்ற மிகச்சிறிய படை, தெரிந்தும் தெரியாமலும் சில துரோகிகள், யுத்த அனுபவமின்மை என்றெல்லாம் இருந்தும் கூட திறமையான ஒரு மந்திரியோ, தளபதியோ, இளவரசனோ போர்களை வென்று செயக்கொடி நாட்டியதை நாங்கள் படித்திருக்கிறோம். கதைகளை படித்த எனக்கு திரைப்படத்தில் எதுவுமே அபத்தமாகவோ, அதீத கற்பனையாகவோ, அதிகப்படியாகவோ இருக்கவில்லை. ஆனந்தமாக, ஆச்சர்யமாக பார்க்கப்பார்க்க ஆசையாகத்தான் இருந்தன.
சரித்திரக்கதைகள் படித்த எனக்கு இந்த திரைப்படம் ஒரு பிரமிப்பாக இருந்தது. உலக சினிமா பார்க்காத,கதைகள் படிக்காத சாதாரண ஒரு ரசிகனுக்கு இது பிரம்மாண்டமாந விருந்தாகவே இருந்திருக்கும். நீங்கள் உலகதரமான சினிமா பற்றி எத்தனை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் திரையில் படம் பார்க்கும் கடைக்கோடி ரசிகன் தான் படைப்பாளிகளின் மூலதனம். அவனுக்கு பிடிக்க வேண்டும் என்பது தான் முக்கியம். தரத்தை உண்மையில் நிர்ணயிப்பது ரசிகர்கள் தான்.
சரி, அபத்தமாகவோ பிரதியாகவோ தான் இருந்து விட்டுப்போகட்டுமே? ஒரு பிரமாண்ட அழகியலை உருவாக்கி இருக்கிறார்கள் அல்லவா?குறைகளையெல்லாம் தாண்டி கலைப்படைப்பாளிகளின் கடின உழைப்பு மெச்சப்பட வேண்டும். அவர்களின் வியர்வையையும் உழைப்பையும் விலைமதிக்க முடியாத வினாடிகளையும் ஒரு போதும் இந்த கோடி இலட்ச ஆயிர நூறு ஐம்பதுகளில் பெறும் சம்பளங்கள் ஈடு கட்டிவிட முடியாது.
முதலில் இந்த படைப்பே ஒரு வரலாறு தான். எதிர்காலத்தில் இது போன்ற அழகான படைப்புகள் உருவாக இது ஒரு முன்னோடி என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே இந்த திரைப்படத்தை கொண்டாடலாம்.
எனவே இந்த காழ்ப்புணர்ச்சி கொப்பளிப்புகள் தர்க்க நியாய வெங்காய புடலங்காய் விமர்சனங்களையெல்லாம் தூ என்று துப்பி புறம் தள்ளி விட்டு அற்புதமான ஒரு அழகியல் அனுபவத்தை நேரடியாக நீங்களாகவே பெற்று விடுங்கள்.
அத்தோடு,
"தேவசேனையும் அமரேந்திர பாகுபலியும் முதன் முதலில் சந்திக்கையில் குமார வர்மனை கட்டப்பா "Hero" என்றா அழைத்தார்?"
என்றும் பார்த்துவிட்டு சொல்லுங்களேன்
May 9, 2017

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக