வணிகப்பசி முற்றி
வான்தாய்ப்பால் சொட்டியது
பரிதி எரித்து மேலிழுத்து
ஒரு பாகம் முடிந்தது
பணபோதை மணல் பறித்தும்
உதிரம் உயிர்ச்சத்து உறிஞ்சியும்
மறு பாகம் தீர்ந்தது
மண்ணாள் சோகை கண்டு
புனல் ஆழப்புதைந்து போக
பூமிக்கருவறை பூட்டிக்கொண்டது
இரவல் நெரித்து வேளாண் சாமி
காலன் புகுந்தான்
வங்கிகள் ஏய்த்த மல்ல எத்தனோ
சிங்கமீனை சுருட்டி அள்ளிக்கொண்டு
சுங்கம் மறைந்து தப்பிப்போனான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக