முனை உடைக்கத்திராணியற்ற
மூத்த புலவரின் கற்பனை
கடைசிச்சொட்டு தீரும்வரை
விற்பனையாகி,
அவர்தம்
சிந்தனைப்பக்கங்கள்
வஞ்சப்புகழும் அங்கதமுமாய்
நிந்தனையின் பக்கம் திரும்பி
வெஞ்சினம் விசிறப்பட்டு,
குழுப்போர் உண்டாக்க
கருப்பொருள் தந்து
குளிர் காய்வதை
காண்கையில்
நிழலுருவின்
ஆதர்ச பிம்பம் விழுந்த
ஆடிகளில்,
மெய்யுருவின்
ஆடை கிழித்த
அலங்கோலம் அதி
பயங்கரமாய்
பிரதிபலிக்கிறது !
பெரியோரே ! அறியோரே !
சரியோரே ! தவறோரே !
விழாக்களையோ
விருதுகளையோ
அறிவித்து விடாதீர்கள் !
முகப்பனுவலுக்கு முன்பே
முக்தியடைந்துவிட்ட
மூதறிஞர்கள்
மகா பாக்கியசாலிகள் எனும்
ஆசுவாசம்
அதிர்ந்துவிடும்படி,
பிரேதங்களின் நெஞ்சை
குறிவைத்து
புதைகுழிகளைக்குத்தி
நுனிமுடி முதல் நகக்கணுவரை
நுழைத்து அந்த
ஒற்றைத்துவாரம் வழி
நிணம் உறிஞ்சி
நூதனமான வாசனையுடன்
வெளிவரும் வாயுவை
சுவாசிக்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக