முதல் முறை கப்பல் பிரயாணம். நான் முன்பே சொன்னது போல சரித்திர கடற்பயண கற்பனைகள் தந்த பரபரப்புடனும் ஆர்வத்துடனும் குடியகல்வு செயற்பாடுகளை முடித்துக்கொண்டு கப்பலுக்குள் நுழைந்தோம்.
ஐந்தாம் தளத்தில் எங்களுக்கான அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மேலே செல்லவேண்டிய மின்தூக்கி கீழே போனதும் என்னடா எனக்குழம்பினேன். அப்புறம் தான் அடடே கப்பலிலல்லவா இருக்கிறோம் என்ற ஞாபகமே வந்தது. ஆஹா ! ஒரே நகைச்சுவை தான் போங்கள். இனி மூன்று நாட்களுக்கு இந்த நிலை தான், ஹா ஹா ஹா
அறையை அடைந்தோம்.உல்லாச விடுதி அறைகளைப்போல இல்லாமல் கொஞ்சம் சிறியதாக இருந்த அந்த அறை பிறந்தநாள் அலங்காரத்துடன் இன்ப அதிர்ச்சியை அளித்தது. (பிறந்த மாத பயணத்தொகுப்பில் போயிருந்தோம், மற்றபடி அன்று பிறந்தநாள் எல்லாம் இல்லை). பலூன்கள், கேக், மெழுகுவர்த்திகள் என்று ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் அங்கிருந்தன.
அவ்வளவு அழகான அலங்காரங்களைக்கூட புறக்கணித்து விட்டு உள்ளே நுழைந்ததும் முதலில் சன்னலைத்தான் எங்கே எங்கேயென ஆவலுடன் துழாவியது உள்ளம். கப்பலுக்குள்ளிருந்து கடலைப்பார்க்கும் ஆசை என்னை எங்கே விட்டது? எட்டிப்பார்த்தபின்பு குழந்தை மட்டும் இல்லையென்றால் balconyயுடன் இணைந்த அறையை எடுத்திருக்கலாமே என்ற பேராசை நமுத்துப்போன கழிவிரக்கத்தில் கொண்டு போய் விட்டது !
அறையில் நிறைய காகிதங்கள் இருந்தன. ஆபத்துக்கால குறிப்புகள், கப்பல் பற்றிய அறிமுகம், அன்றைய நாளுக்கான நிகழ்ச்சி அட்டவணை என்பன அவற்றுள் அடக்கம். அந்த அட்டவணைப்படி ஆபத்துக்காலப் பயிற்சி நிகழ்ச்சிக்கு அடுத்து நாங்கள் செல்ல வேண்டி இருந்தது. muster station என்று சொல்லப்படுகின்ற கூடுமிடம் சுமார் 20 பேருக்கு ஒன்றாக ஒவ்வொரு அறைக்கும் தள மற்றும் இட வாரியாக பிரிக்கப்பட்டிருந்தது. அவசரகால அறிவுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்புக்கவசத்தின் பிரயோகம் எல்லாம் விமானங்களில் போலவே சொல்லப்பட்டது. கப்பல் புறப்பட சுமார் 1 மணிநேரத்துக்கு முன்பாக இந்த பயிற்சி வழங்கப்படுமாம்.
அறைக்கு திரும்பி வந்தோம். பசி வயிற்றை கிள்ளியது. star navigator (நிகழ்ச்சி அட்டவணை) இல் உணவகங்களைத் தேடுவது அடுத்த பணி.கப்பலுக்குள் 6 உணவகங்கள். Mariners, Bella Vista, Dynasty, Oceana BBQ என்பவை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறந்திருக்கும்.Blue Lagoon மற்றும் Taipan, 24 மணிநேர உணவகங்கள். அட்டவணையின் படி அந்த நேரத்தில் இந்திய உணவு Mariners இல் மட்டுமே கிடைத்ததால் அங்கு போனோம். 9ம் தளத்தின் மத்தியில் அது அமைந்திருந்தது. மூன்று நாட்கள் இந்த தளங்களை கண்டுபிடிக்கவே சரியாகி விடுமென்று தோன்றியது.
அறையின் இலக்கத்தைக்கொண்டு மேசையை ஒதுக்கித்தருவார்கள் போலும். எப்படியோ ஒரு வழியை சன்னலுக்கருகில் ஒரு மேசை கிடைத்தது. கப்பல் புறப்படுகையில் எப்படி இருக்கும் என்று உணர ஆவலாக இருந்தது. பொதுவாக உல்லாச விடுதி உணவகங்களைப்போலவே முதன்மை உணவு, பச்சை காய்கறிகள், பழங்கள், கோதுமைப்பண்டங்கள், இனிப்புகள்,குளிர் மற்றும் சூடு பானங்கள் என தனித்தனியே பிரிவுகளாக பிரித்துவைக்கப்பட்டிருந்தன. கப்பலின் நடு மத்தியில் அதன் முழு அகலத்துக்குமாய் அகன்று இருந்த கப்பலின் மிகப்பெரிய உணவகம் அது.
சாப்பிட்டுக்கொண்டிருக்கையிலேயே கப்பல் புறப்பட்டு விட்டது ! ஒன்றுமே தெரியவில்லை. அலை அசைவதை பார்த்துக் கூட அறிய முடியவில்லை. தூரத்தில் தெரிந்த ஒரு கட்டிடம் நகர்வதை வைத்துத்தான் தெரிந்து கொள்ள முடிந்தது. அச்சோ ! ஏமாந்து போனேன் !.
உணவகத்துக்கு வெளியே ஒரு புறம் தீர்வையில்லா கடைகள் இருந்தன. அதைத்தாண்டியதும் Bella Vista உணவகம் இருந்தது. அது கப்பலின் பின்புறம் என்று பின்பு தெரிந்து கொண்டோம்.
ஒரே பரபரப்பு எனக்கு. அடுத்து என்ன? மேற்தளம் எதுவெனத்தேடி போகவேண்டும். வேறென்ன? அது 12ம் தளத்தில் இருந்தது. 11ம் தளம் வரை தான் மின்தூக்கி இருந்தது. 11ம் தளத்தில் ஒரு நீச்சல் குளம் அதற்கடுத்த படிகளில் ஏறி 12ம் தளம் செல்ல வேண்டும்.
அப்பப்பா !! என்ன காற்று ! என்ன வெயில் ! என்ன குளுமை ! இது மூன்றும் சேர்ந்ததே அங்கு ! அது தான் எனக்கு அதிசயம். சாண்டில்யன் கூட இப்படியெல்லாம் வந்துதான் கதை எழுதி இருப்பாரோ? என்னை விட குழந்தை அங்கும் இங்கும் ஓடி ஓடி அவ்வளவு மகிழ்ந்தாள்.
அந்த தளத்தில் தான் கவனித்தேன், கப்பல் பிரயாணிகளில் பெரும்பாலானோர் வட இந்தியர்களாக இருந்தனர். பலர் தேனிலவுக்காகவும், சிலர் குடும்பத்தோடு இன்பச்சுற்றுலாவும் வந்திருந்தனர். பலர் மும்பை, ராஜஸ்தான், டெல்லி யிலிருந்து தான் வந்திருந்தனர். சிங்கப்பூர் மற்றும் மலேசிய சுற்றுலாக்கள் அங்கிருந்தே ஏற்பாடு செய்யப்படுகின்றனவாம்.அதில் எனக்கென்ன ஆச்சரியம் என்றால், அவர்களில் பெரும்பாலானோர் மேற்கத்தியரை விட நவநாகரீகமாய் இருந்தனர். ஆடை என்பது அவரவர் விருப்பம் அதில் என் கருத்துக்கு ஒன்றும் இல்லை.பொதுவாக இந்தியப்பெண்களை நவநாகரிக உடைகளில் நான் பார்த்ததே இல்லை.அதனால் எனக்கு அது ஒரு அதிசயமாகத்தோன்றியது.
அந்த மேற்தளத்தரை பலகையினால் ஆனது. அதிலிருந்து கப்பலும் முன்புறமும் பின்புறமும் இறங்கிச்செல்லவும் படிகள் இருந்தன. தவிரவும் நடுவில் ஒருபுறம் பெரியோருக்கான ஒரு நீச்சல் குளமும் மறுபுறம் சிறியோருக்கான நீச்சல் குளம், Oceana BBQ உணவகம் மற்றும் ஒரு கலைநிகழ்ச்சி மேடையும் இருந்தன. 4 மணிக்கு அங்கு சிறுவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாடல்களும் விளையாட்டுமாக சுவாரசியமாக இருந்தது. அக்ஷராவால் பங்கு கொள்ள முடியாவிட்டாலும் பாடலுக்கெல்லாம் ஆசை தீர ஆடி மகிழ்ந்தாள்.
கப்பலுக்குள் இருந்த சிறுவர் காப்பகம் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதைத்தொடர்ந்து காப்பகம் 30 நிமிடங்கள் அறிமுகத்துக்காக திறந்திருக்கும் என்பதால் அங்கே சென்றோம். அக்ஷரா விளையாடினாள். அங்கிருப்பவர்களுடன் இயல்பாக ஒட்டிக்கொண்டுவிட்டாள். கப்பலுக்குள் எதற்கு சிறுவர் காப்பகம் என்று ஒரு கேள்வி எழுகிறதில்லையா? எனக்கும் தெரியவில்லை. ஆனால் பின்பு வயது வந்தோருக்கான நிகழ்ச்சிகள் சிலவும் கப்பலுக்குள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததை அறிந்ததும் ஓ இதற்குத்தானா?
மீண்டும் மேற்தளம் சென்றோம். பின்னே, அதுதானே ஒரே குறிக்கோள்? வெயில் குளிக்கும் சாய்வாசனங்களில் அமர்ந்து அந்த கடல் வாசம் நுகரும் இன்பம் இருக்கின்றதே. உப்புத்தென்றல் உவர்ப்பாக இருக்கவில்லை. உவப்பாகத்தான் இருந்தது. நகர மனமின்றி நீண்ட நேரம் அப்படியே சுற்றி விட்டு இரவுணவையும் அங்கே முடித்துக்கொண்டு கீழே வந்தோம்.
Star Navigator இன் படி Star Dust Lounge இல் அன்றிரவு ஒரு Sophie Edelstein, The French Lady of Magic இன் Mystery என்கிற மாயவித்தை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. மர்மம் என்ற பெயர் இருந்ததாலோ என்னவோ மர்மத்தை தேடுவதிலேயே ஆர்வமாய் இருந்தேன். பொதுவாக மாய வித்தை நிகழ்ச்சிகளில் மாயம் ஏதும் இல்லை. ஒரு திறமையான ஏமாற்று தான் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு. அன்றைய நிகழ்ச்சி ஒவ்வொரு வித்தையின் உண்மைத்தன்மையை கண்டுபிடிக்கும் எங்களின் முயற்சியிலேயே மிக சுவாரஸ்யமாகக்கழிந்தது. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏமாற்றிவிடும் அதிவிரைவான அவர்களின் செயற்பாடுகளை பாராட்டியே ஆக வேண்டும்.
ஆங் சொல்ல மறந்து விட்டேனே, அதற்கு செல்கையில் மின்தூக்கியில் மிகவும் வயதான இரண்டு சீனப்பெண்மணிகள் வந்தார்கள். சுமார் 10.30 மணி இருக்கும். இந்நேரத்தில் இவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று யோசித்தேன். Star Dust Lounge இருக்கும் பத்தாம் தளத்தில் தான் இறங்கினார்கள் ஆனால் சென்ற இடமோ Maxims Lounge. அங்கே என்ன இருக்கின்றது ?
அன்றிரவு போல் என்றுமில்லை ! இருள், கடல், அலை, அமைதி, சன்னலோரத்தில் இருந்த மெத்தையாசனம், ரம்யமான உறக்கம். நிலா இல்லாத குறை ஒன்று தான். அதனாலென்ன தேவதை தான் அருகில் உறங்குகிறாளே !
- தொடரும்
#superstargemini
April 24, 2017

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக