"Room ல போய் fan அ off பண்ணிட்டு வாங்க"
வீட்டில் பேசிய ஒரு வசனம். கலப்படம் எவ்வளவு இயல்பாக வந்து விட்டது என்பது ஆச்சர்யம் மட்டுமல்ல அதிர்ச்சியும் கூட
இலக்கியம் சார்ந்தோரில் பெரும்பாலானோர் ஆங்கில வசனங்களை தமிழ் எழுத்துக்களில் எழுதுவதும், வேறு சிலர் Facebook, Twitter, Whatsapp, Instagram என்பவற்றை தமிழ் படுத்துவதிலும் உள்ள நகை முரண் அதை விட ஆச்சர்யம். சரி தவறு என்பதையெல்லாம் தாண்டி இந்த இரண்டுக்குமான தேவை என்ன என்பது எனக்குள் இருக்கும் கேள்வி.
சுமார் 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்பு
"தனியார் பேருந்து வரல, அரச பேருந்துல வந்தேன்"
"சிற்றுண்டிசாலையில் இனிப்பு கோதுமை பண்டம் இல்ல "
"அவ மலசல கூடம் போய்ட்டா"
"கரும்பலகையில் பேரெழுதிடுவேன்"
என்று கலப்படம் இல்லாத தமிழில் பேசி சுற்றியிருந்தவர்களை நான் கடுப்பேற்றிய அந்த வரலாற்று சிறப்பு மிக்க (என் வரலாற்றைச்சொன்னேன்) நிகழ்வு யாருக்கெல்லாம் ஞாபகம் இருக்கின்றது சொல்லுங்கள் பார்ப்போம்.
இதைப்படிக்கிற அம்மா உட்பட எத்தனை பேர் அப்போதைய என் performance ஐ நினைத்து ஐயோ என்று தலையில் அடித்துக்கொள்கிறார்களோ? (performance...performance...ஆஹா, இதற்கான தமிழ் வார்த்தை என்ன என்று வேறு இப்போது யோசிக்க வேண்டும்.)
கடைசியில் நேயர்கள் பலர், "தயவு செய்து ஒரு அகராதியை கையோடு எடுத்துக்கொண்டு திரிகிறாயா" என்று சாம பேத தான தாண்ட உபாயங்களைப்பயன்படுத்தி கேட்டுக்கொண்டதற்கிணங்க சுமார் 6 மாதம் கழித்து என்னுடைய அந்த சுத்தத் தமிழ் புரட்சி கைவிடப்பட்டது.
இப்போது நிலைமை இன்னும் மாறி விட்டது. முன்பெல்லாம் இயல்பாய்
"குப்பத்தொட்டிக்குள்ள"
"தலகாணிய"
"நாக்காலில"
"மேச மேல"
என்று சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள் இப்போது மிகச்சாதாரணமாய்
"dust binக்குள்ள "
"pillowவ"
"chairல"
"table மேல"
என்று மாறி விட்டன.
போதாக்குறைக்கு usually basiclly actually என்றெல்லாம் தொக்குகள், இடைச்செருகல்கள் வேறு. எந்த மொழி சரி, எது தவறு, பெரியது, சிறியது என்றெல்லாம் எதுவும் இல்லை. ஆனால் 50% கலப்படம் என்பது இரண்டு மொழிகளுக்கும் களங்கம் தான். ஏதாவது ஒரு மொழியை சரியாக பேசவேண்டுமல்லவா?
இப்போது தான் பேச ஆரம்பித்திருக்கும் என் குழந்தை தமிழோ ஆங்கிலமோ அதை தூய்மையாய் கற்க வேண்டியது மிக அவசியம்.
எங்கள் வீட்டுக்கு மேல் வீட்டில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க தம்பதி இருக்கின்றார்கள். அவர்கள் பேசும் தமிழ் என்னை ஆச்சரியப்படுத்தியது.
"கணவரு வாங்கிட்டு வந்தார்"
"மனைவி உங்கள வழில பாத்ததா சொன்னா"
"இதோட கெடு எப்போ முடியுதுனு பாத்து சொல்லும்மா"
யதார்த்தமாகவே இப்படித்தான் பேசுகிறார்கள் இருவரும். கேட்கக்கேட்க எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
"Room ல போய் fan அ off பண்ணிட்டு வாங்க" என்பதை விட
"Switch off the fan in the room"
என்றோ
" அறைல இருக்க விசிறிய நிறுத்திட்டு வாங்க"
என்றோ சொல்வது சரியாக;அழகாக;முழுமையாக;நன்றாகத்தானே இருக்கின்றது?
ஹை, இந்த விளையாட்டு நல்லா இருக்கு.
எனவே இந்த சவால்களுக்கிடையிலும் மீண்டும் பல வருடங்களுக்கு முன்பு போல ஒரு ஒழுங்கான மொழிப்பயன்பாட்டை தொடங்கலாம் என்றிருக்கிறேன்.சாத்தியக்கூறுகள் மீது சந்தேகம் இருப்பினும் கூட ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
(ஏற்கனவே அனுபவப்பட்டோர் உங்கள் அனுபவங்களையும் அனுதாபங்களையும் Karthikeyan Ganeshan உடன் பகிரலாம். என் வாய்க்கு இருக்கும் ஒரே ஒரு சோடி செவி அது)
இப்போது சொல்லுங்கள், photo வை நிழற்படம் என்பது சரி. புகைப்படம் என்று ஏன் சொல்கிறார்கள்?முன்பெப்போதாவது அதிலிருந்து புகை வந்ததா?
#என்_தாய்மொழியை_சரியாகப்_பிரயோகிக்க_என்_குழந்தைக்கு_கற்றுத்தர_என்னாலான_சிறு_முயற்சி
#எவ்வளவு_தூரம்_போக_முடிகிறதோ_அதுவரை
May 15, 2017
(நான் நினைத்ததை விட இந்த விளையாட்டு சுவாரஸ்யமாகவே இருக்கின்றது.
நாநுனியிலும் அதையும் மீறியும் வந்து விடுகிற சில வார்த்தைகளை நின்று நிதானித்து தமிழ்ப்படுத்தி பேசுவது உண்மையிலேயே நன்றாக இருக்கின்றது.
தினசரி நாம் பயன்படுத்தும் சில வார்த்தைகளை "துண்டு", "பள்ளிகூடம்", "பை", "சப்பாத்து","குளிக்குற அறை", "சாப்பாட்டு அறை". "படுக்கையறை"," மின்விசிறி", "விளக்கு", "ஈரக்காகிதம்" போன்ற வார்த்தைகளை ஓரளவுக்கு இயல்பாக பேச்சில் கொண்டுவந்து விட முடிகிறது என்பதே பரீட்சார்த்த முயற்சி ஒன்றுக்கு வெற்றி தானே?
ஆனால் "toilet", "TV", "fridge", "diaper", "sir", " madam" போன்றவற்றை இயல்பாக மாற்ற முடியவில்லை, யோசிக்கவேண்டும்.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக