உள்ளங்காலின் மீது
நடை பழகும் விரற்பஞ்சு
இடைப் பள்ளத்தாக்கில்
புதையுண்டு போகும் நுனி நாக்கு
உதட்டு மேடையில்
நளினமாடும் மீசைத்தூரிகை
புனலிடைப்பூவாய் மிதக்கும்
மோக மேகம்
முத்தச்சல்லடைக்கண்
வழிந்து ஊடுருவி
கூடல் பிரளயத்தில்
கரைந்து நெகிழ்ந்து
நிலவாடியில் தெறித்து
நீக்கமற நிறைந்து போகிறது காதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக