உலக்கைக்கப்பால் ஆசுவாசமாய்
வலிகளுக்கிடையே சிறு ஒய்வு
சமையலறை நிராகரிப்பால்
அமைதியாய் சில நூல்கள்
சுரத்தின்றி துவண்டிடாதிருக்க
இரத்தத்துக்கீடாய் நல்லுணவு
திட்டுக்களின் சங்கடம் தவிர்க்க
தீட்டு என்றொரு ஒதுக்கம்
அந்தகார மடமைகளுக்கப்பால்
தூரமெனும் அஞ்ஞானத்தின்
சாரமொரு மெய்ஞ்ஞானமது
பாரம் குறைத்த விஞ்ஞானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக