காவோலைகள்


கண்மை போட்டியிட்ட கருங்குழலில்
வெண்மையின் போர்வை,

கபில தேகம் பிதுங்கித்தெரியும்
கரும்பச்சை நரம்புகள்,

கைவிசிறி மடிப்புகளாய்
நைந்திருந்த சருமம்,

பெற்றும் பல மாதம் போக்கியும்
இற்றுப்போன கர்ப்பக்கிரகம்,

விழிநீரின் கடைத்துளியில்
வழிந்தோடும்
பழங்காலத்தின் மிச்சங்களும்
நிகழ்காலத்தின் துச்சங்களும்
எதிர்காலத்தின் அச்சங்களுமாய்,

பிரியக்காத்திருக்கும்
சரிதமொன்றின் சுயம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக