"ஆஹா, உங்களுக்கென்ன சிங்கப்பூரில் சம்பாதிக்கின்றீர்கள்" என்று யாரேனும் இனிமேல் உங்களிடம் சொன்னால் அவர்களுக்கு "நம்பர் விளையாட்டு" நூலை பரிசளித்து விடுங்கள்.
ஒரு வெள்ளிக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பை கணக்கிட்டுப் பார்க்கும் மூளைகள் பலவற்றுக்கு அந்த ஒற்றை வெள்ளிக்குப் பின்னால் இங்கு இருக்கும் போராட்டம் புரிவதில்லை. இதற்கு தொழிற்துறை சார்ந்தோர், நிரந்தர வாசிகள், குடிமக்கள் யாரும் விலக்கல்ல என்றாலும் கூட, குறிப்பாக கட்டுமானப் பணி ஊழியர்கள் மற்றும் வீட்டுப்பணி உதவியாளர்கள் வாழ்க்கை உண்மையிலேயே முட்படுக்கை போன்றது. அவர்களின் உடல், உளவியல் அழுத்தங்களை புரிந்து கொள்வதும் ஆதரவாக நடந்து கொள்வதும் அவ்வளவு எளிதல்ல. அதை உணர்வுபூர்வமாக செய்து மனதை உருக்கும் சில சம்பவங்களை கதைகளாக மாற்றியிருக்கிறார் கதாசிரியர்.
வாழ்க்கைக்கான சுதந்திரக்கதவுகள் திறக்கப்பட்ட பின்பு ஒரு மனிதன் சந்திக்கக்கூடிய பல சவால்களை பேசுகின்றன பெரும்பாலான கதைகள். தவறிழைக்காது தற்காத்துக்கொள்ள அறிவுறுத்துகின்றன.
உண்மையை சொல்வதென்றால் சிங்கப்பூரில் வளரும் ஒரு பதின்ம வயதுக் குழந்தையின் பாடப்புத்தகமாக நான் இந்த புத்தகத்தை பார்க்கிறேன்.
அவற்றில் காணப்படுவதைப்போல கதைகளுக்கிடையே இருக்கும் சித்திரங்களுக்காகச் சொல்லவில்லை,
ஒவ்வொரு கதைக்குள்ளும் இருக்கும் உயர்ந்த படிப்பினைக்காக மட்டும் சொல்லவில்லை,
அத்தோடு அந்த கதைகள் எழுதப்பட்டிருக்கும் மிக எளிய இயல்பான நடைக்காகவும் சொல்கிறேன். நிறைய வர்ணனைகளோ, உவமைகளோ இல்லாமல் அன்றாட வாழ்வியல் சம்பவங்களை ஆராய்ந்து அவற்றிலிருந்து ஒரு நீதியை எடுத்து ஒரு தேர்ந்த கதை சொல்லியின் பாங்கில் இலகுவான தமிழில் எழுதியிருக்கின்றார் கதாசிரியர்.
தவிரவும் தான் ஒரு நகைச்சுவை எழுத்தாளர் என்பதை கதைகளுக்கிடையே அனாயாசமாக நகைச்சுவைத் துளிகளை தூவி விட்டுச் சொல்லிச் செல்கிறார். உதாரணத்துக்கு சிலவற்றை சொல்வதென்றால் பரந்தாமனின் 'மிஸ்டர்' கதையை படித்து சிரித்து மாளவில்லை. இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது. "ஞாயிறும் தேக்காவும்" சிரித்தாலும் அது தான் யதார்த்தம்.
என் கணிப்பு இது தான்.
மிக மிக மிக மிக சுவாரஸ்யமான கதை "சென்னைக்கு அருகில்", மிக மிக மிக சுவாரஸ்யமான கதை "தானம்", மிக மிக சுவாரஸ்யமான கதை "H2O", மிக சுவாரஸ்யமான கதை "யாருக்கு வெற்றி". மீதமுள்ளவை சுவாரஸ்யமான கதைகள். ஆனால் பிடிக்காத ஒரு கதை "குறையொன்றுமில்லை".
காரணம் தெரியவேண்டுமென்றால் "நம்பர் விளையாட்டு" வாங்கிப் படியுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக