சூரிய காமுகன்
தன் கொதிக்கும்
கரங்களை நீட்டிக்கொண்டு
பலாத்காரம் செய்யத்துரத்தும்
அக்கினி நட்சத்திர தினத்தில்,
நிற்கும் மின் விசிறி
ஒன்றின் சுற்றலினால்
துளித்துளியாய் வருடிச்செல்லும்
காற்றின் தூறல் தரும்
சுகத்துக்கு ஒப்பானது,
உடலும் மனமும்
உழைத்துக் களைத்த
நாளொன்றின் இறுதியில்
உறக்கத்துக்கு முன்பு
நீ சொல்லும்
'ஐ லவ் யூ'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக