ஒருவன்
ஒரு கோப்பை தண்ணீர்
சில டிசு தாள்கள்
மற்றும் துளியளவு
பொறுப்புணர்ச்சியும் கொண்டு
இலகுவாக செய்து முடித்து விடக்கூடிய
அக புற உடல் சுத்தியை
அதே எண்சாண் உடம்பும்
அதே எண்ணற்ற கனவுகளும்
உள்ள இன்னொருவனை
வெறும் கைகளால்
செய்ய வைத்து
வலியையும் கண்ணீரையும்
சிலுவையாய் சுமக்க வைத்து
அலட்சியமாய் கடந்து செல்லவா
குரங்குகளுக்கு ஆறறிவெனும்
கூர்ப்பை தந்தாய் இறைவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக