முத்தம்

நாணக்குருதியில் குளித்த
கன்னங்களின் மீது படர்ந்த
உள்ளங்கை ரேகைகளின் 
மெல்லிய அதிர்வின் ஒலி
செவிப்பறைகளில் தெறித்ததில்,

பெரும் காட்டாற்று வெள்ளத்தில்
தவறி விழுந்த ஒரு பிஞ்சு 
இலை போல பதறி அலைவுறும்
செவ்விதழ்களை ஆதுரத்துடன்
ஸ்பரிசித்த முத்தத்தின் சத்தம்
டெசிபலற்றுப்போனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக