முளை களை தளம்

எழுத்தென்றால் என்ன 
வேறு எதுவென்றால் என்ன

தூண்டிவிட காத்திருக்கும்
துரியோதனன்களுக்கும்

துகிலுரிய தயாராயிருக்கும் 
துச்சாதனன்களுக்குமிடையே

ஏகலைவன்களை உருவாக்கும் 
துரோணர்களை கண்டறியும் 
நிராசையிலேயே

தேவதைகளின் ஆயுள் முடிந்து விடுகிறது !





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக