எங்கே விட்டேன்?? ஆ casino வில்.
Casino என்று அழைக்கப்படும் சூதாட்டக் கூடங்கள் கப்பலுக்குள் இருந்தன. 10ம் தளத்தின் ஒரு முனையில் மாலுமி அறையும் அதனை அடுத்து star dust lounge என்னும் அரங்கமும் தவிர மீதமுள்ள தளத்தின் முழு பகுதிக்குமாய் நீண்டிருந்தது maxims lounge. அதன் முக்கால் பகுதியை ஆக்கிரமித்திருந்தன சூதாட்டக்கூடங்கள்.
நான் முன்பே கூறியிருந்தது போல கப்பலில் இந்தியர்கள் தான் அதிகம். மீதமுள்ளவர்களில் சீனர்கள் அதிலும் சுற்றுலாக்குழுக்களைத்தவிர வயதான சீனர்களே நிறைந்திருந்தார்கள்.அவர்கள் அனைவரும் இந்த சூதாட்டக்கூடங்களில் தான் பெரும்பாலான நேரங்களில் இருந்தார்கள்.ஒரு மாதுவுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பேசியபோது அறிந்துகொண்டது இதைத்தான்.
இங்குள்ள சூதாட்டக்கூடங்களின் அங்கத்துவத்துவ அடிப்படையில் கப்பல் பயணக் கட்டணங்களில் சலுகைக் கழிவு உண்டாம். ஓய்வூதியம் பெறும் முதியோரில் பலர் பொழுது போக்குக்காக இப்படி நண்பர்களோடு இணைந்து வருவது உண்டாம். தானும் இப்படி பலமுறை வருவதாகச் சொன்னார்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த சூதாட்டக்கூடங்களுக்குப் பின்னால் இவ்வளவு இருக்கின்றதா என்று? சதுப்பைப்போல மூழ்கடிக்கும் விடயமல்லவா இது?
ஆனால் ஒரு விதத்தில் இங்கு உள்ள குடும்ப அமைப்பு முறையில் முதியவர்கள் தனிமையில் வாடுவதை விட இப்படியாவது பொழுது போக்குவது அவர்களின் மன அழுத்தத்தையாவது குறைக்கும் என்பதும் ஒரு விதத்தில் மறுக்க முடியாத உண்மை தான்.
சரி இரண்டாம் நாளுக்கு வருவோம்.
அன்று காலை இருக்கும் நிகழ்ச்சிகள் பற்றிய அட்டவணை முதல் நாள் இரவே வைக்கப்பட்டிருந்தது. அதற்கு போகவேண்டும் இதற்குப் போகவேண்டும் என்றெல்லாம் திட்டங்கள் தீட்டினோம். ஆனால் காலையில் எழுந்ததென்னவோ 10.30மணிக்கு 😳😂.
குளித்து தயாராகி அட்டவணையை பார்த்தால் அந்த நேரத்துக்கு Dynasty இல் மட்டும் அதுவும் காலை தேனீர் நேரம் தான் இருந்தது ! தலையெழுத்தே ! சாப்பாடு ஒன்றும் இருக்காதே !
முதல் நாள் மாலையில் 11ஆம் தளத்தின் பின் முனையிலிருந்த வெளியில் சாய்வு மனையிலமர்ந்து கடல் காற்றை ரசித்துக் கொண்டிருந்த போது கண்ணாடித்தடுப்பு வழியாக பார்த்தது இந்த உணவகத்தைத் தான் போலிருக்கின்றது.
ஒரு தளத்தை மூன்று அடுக்குகளாகப் பிரித்து ஒரு அரைக்கால் வட்ட அமைப்பிலிருந்த அந்த உணவகத்தில் அமர்ந்து தேனீர் அருந்தியது ஒரு அழகான உணர்வு. எல்லா உணவகங்களுக்குமான தேனீர் ஒன்றாகவே தயாரிக்கப்பட்டபோதிலும் இங்கு தேனீர் சுவையாக இருக்கின்றது என்று எனக்குத்தோன்றியது அதனால் தானாக இருக்கவேண்டும்.
சோகம் கலந்த பசியோடு போய் எலுமிச்சை அளவில் சில கேக்குகளோடு தேனீரை அருந்தி விட்டு அறைக்குத்திரும்பினோம்.
அட்டவணையின் படி அந்த நேரத்தில் wet & wild party. பெரியவர்களுக்கான நீச்சல் குளத்தில் நடந்து கொண்டு இருந்தது அந்த நிகழ்வு. ஆனால் நாங்கள் அங்கு போய் சேர்கையில் நிகழ்வு ஏறக்குறைய இறுதியை நெருங்கிக்கொண்டிருந்தது. உச்சி வெயிலில், நீச்சல் குளத்தில் மிதக்கையில் மேலிருந்தும் நீர் விழுந்தால் ! கூடவே பாடல்கள் நடனங்கள் என்றும் இருந்தால் ! சே தவற விட்டு விட்டோம்.
சிறுவருக்கான நீச்சல் குளத்துக்கு அக்ஷராவை அழைத்து சென்றோம். அது வெயிலை மறைத்து நிழலில் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் தண்மையாகவும் இருந்தது. ஆனால் அவளுக்குத்தான் நீரென்றால் கொள்ளை பிரியமாயிற்றே? நுனிக்கால் பட்டவுடன் அழத்தொடங்கியவள் தான், எங்களுடைய எந்த முயற்சியையும் பலிக்க விட்டு விடாமல் உடை மாற்றி விட்ட பின்பு தான் சமாதானமானாள்.
அப்புறம் என்ன? அடுத்த வேளை உணவு தான். இம்முறை Bella Vista வுக்கு சென்றோம். அங்கு buffet இல்லை. A La Carte முறை உணவு தான். இந்திய உணவு அல்லது மேலைத்தேய உணவு இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும். ஆனால் ஏற்கனவே மேசை கண்ணாடி பாத்திரங்களோடு ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததால் குழந்தையோடு இருந்து சாப்பிட அந்த உணவகம் ஏற்றதல்ல என்று தோன்றிற்று. அதன் பின்பு ஒரு முறை கூட நாங்கள் அங்கு செல்லவில்லை.
உண்ட மயக்கம் குட்டி தூக்கம் போட்டு எழுந்ததும் பினாங்கு வந்திருந்தது. கப்பலை எப்படி துறைமுகத்தில் நிறுத்துவார்கள் அன்று அறிய ஆசையாக இருந்ததால் 12ம் தளம் சென்றோம்.
5 அல்லது 4 ஆம் தளத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் கொக்கிகள் போன்று ஏதோ இருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். கரையிலிருந்து அந்த கொக்கிகளில் ஏதோ கயிறு போன்ற ஒன்றை போட்டு தான் கரைக்கு இழுத்தார்கள். 12 ஆம் தளத்திலிருந்து பார்க்கையில் அப்படித்தான் தெரிந்தது. தளத்திலிருந்த கண்ணாடித்தடுப்பு என் உயரத்துக்கு நெஞ்சளவு இருந்ததால் விழுந்து விடுவேனோ என்றெல்லாம் தோன்றவில்லை. ஆனால் அந்த உயரத்திலிருந்து பார்க்கையில் அதல பாதாளத்தில் தெரிந்த தரை அச்சுறுத்தியதென்னவோ உண்மை.
பினாங்கு !
தூரத்தில் Cititel உயர்ந்து கம்பீரமாய் நிற்பது தெரிந்து தேனிலவின் அழகான ஞாபகங்களை கிளறி விட்டது.
எவ்வளவு மாற்றம் ! முன்பு வந்த போது அங்கிருந்து கடலை பார்த்து பேசிக்கொண்டிருந்தோம். இப்போது கடலிலிருந்து அதைப்பார்க்கிறோம்.
மழை தூறிக்கொண்டிருந்த ஒரு அழகான மாலையில் ஒரு குடைக்குள் இருவருமாய் அந்த விடுதியின் இடது புறத்திலிருந்த பாதை வழியே Easten & Orientel Hotel வரை நடந்தே சென்று பார்த்தது,
மீண்டும் வலது புறம் அந்த பெரிய வணிக வளாகம் வரை நடந்தே சென்றது,
அதற்குள் இருந்த ஒரு கடையில்(அதன் பெயர் மறந்து விட்டது) குவிந்திருந்த கைப்பைகள், தோள்ப்பைகள், அழகான காலணிகள்,
Cititel இற்கு எதிரிலிருந்த ஒரு தெருக்கடையில் உண்ட கேவலமான மசால் தோசை,
மழையோடு மழையாய் ஒரு இளங்காலைப்பொழுதில் மழை மணத்தோடு அந்த ரிக்ஷா சவாரி,
அத்தனையும் வந்து போயின.
இம்முறை நேரம் குறைவாக இருந்ததாலும் மாலை நேர காலநிலை என்பதாலும் நாங்கள்
அங்கு இறங்கவில்லை. மாறாக சூரியன் மறைவதை காண 12 ஆம் தளத்திலேயே காத்திருந்தோம்.
அன்றைய காலநிலை சற்று நிலையானதாக இருக்கவில்லை என்பதாலோ என்னவோ தரையிலிருந்து பார்ப்பது போல சூரியன் அப்படியே கடலில் மூழ்கவில்லை.
போர்க்காலம் போல கலைந்து கிடந்த மேகங்கள் எல்லாம் பரபரப்பாக ஒன்று கூடி சூரியனை ஓங்கி ஓங்கி குத்தியதில் அதன் மஞ்சள் நிறக்குருதி வெடித்து சிதறியதால் மேலைக்கடலெங்கும் வியாபித்த அதன் ஒளிக்கீற்றுக்கள் என் மேனியிலும் படர்ந்து தெறித்ததாக தோன்றியது.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதல்லவா அந்த காட்சி!
இருள் பரவியதும் oceana இல் இசை நிகழ்ச்சி தொடங்கியது. துள்ளலிசை பாடும் போது உற்சாக மிகுதியில் பாடகர்கள் உச்சஸ்தாயியில் அலற ஆரம்பித்ததால் காதை காப்பாற்றிக்கொள்ளும் எண்ணத்தோடு கீழே உணவருந்த வந்தோம்.
உணவுக்குப்பின் maxims lounge இல் பிலிப்பைன்ஸை சேர்ந்த 3 கலைஞர்களின் இசைக்கச்சேரி. பார்வையாளர்கள் அதிகமில்லை. அலறலில்லாமல் உச்சஸ்தாயி உச்சஸ்தாயியாக இருந்தது. ரசிக்கும்படியான அருமையான இசை நிகழ்ச்சி.
அதனைத் தொடர்ந்து கப்பல் பணியாளர்கள் வழங்கிய The Crew எனப்படும் கலை நிகழ்ச்சி இடம் பெற்றது. கப்பலில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பணியாளர்கள் இணைந்து தம் திறமைகளை வெளிக்காட்டினர். பயணிகளை மகிழ்வூட்டும் அந்த கேளிக்கை நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
பாடல், ஆடல், மாயாஜால வித்தைகள் மற்றும் மதுபானக்கூட பணியாளர் ஒருவர் செய்த சாகசங்கள் இருந்தன. தவிர ஆண்கள் பெண்களாகவும் பெண்கள் ஆண்களாகவும் வேடம் தரித்து தத்ரூபமாக நடித்தார்கள். பல்வேறு நாடுகளை சேர்ந்த பல பணியாளர்கள் தத்தம் கலாசார நிகழ்வுகளையும் அரங்கேற்றினர். "சம்மக்கு சல்லோ" மற்றும் " லுங்கி டான்ஸ்" என்கின்ற இந்திய பாரம்பரிய நடனத்துடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
அன்று மூன்றாம் பிறை.
மேல்தளத்தில் தெரிந்த பிறை நிலா
கீழ் தளத்தின் அறையில் தெரியாத போதும்
சாளரம் கடத்திய அதன் ஒளிக்கதிரின் ஸ்பரிசம் மெய்மறக்கச் செய்தது.
இளையராஜா தாலாட்டு பாட
இணையம் மறந்த
இனிமையான உறக்கம் அன்று
-தொடரும்
#superstargemini
June 30, 2017

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக