இளமை

கல்லூரி விடுமுறை 
நாளொன்றில்
பள்ளித்தோழிகளோடு 
பழங்கதை பேசி சிரித்துக்கொண்டிருந்தவளிடம்
"காது வலிக்குது சத்தத்தை குறையுங்களேன்" 
என்று அம்மா சொன்னபோது
சிரிப்பு வந்தது அவளுக்கு

சில வருடங்கள் கழித்து
அவள் குழந்தை 
பாலர் பாடசாலை 
பாடல்களை கணணியில்
சத்தமாக கேட்கும் போது 
அதே வார்த்தையை
சொல்ல நினைக்கையில்
அவள் காதுகளின் பின்னால்
சுருண்டிருந்த மயிர்க்கற்றையில்
இளமை நீர்க்க ஆரம்பித்திருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக