முத்தமும் முதலையும்

வானவில்லுக்கு தோதான
காலநிலையுள்ள நாளொன்றில்

மனிதனின் வற்றாத மாசு தானத்தால்
புனிதமற்றுப்போன புனல்நிலைக்குள்

புழுக்கத்தாலோ இல்லை
நடுக்கத்தாலோ

இருப்புக் கொள்ளாமல்

தரைக்கும் தண்ணீருக்குமாய்
தத்தளிக்கிறது முதலையொன்று

கரையில் கண்களை மூடியபடி

திளைத்திருக்கிறது காதலொன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக