'காலனித்துவத்தின் கீழ் இருந்த எல்லா நாடுகளிலும் சுதந்திர தினம் என்பது ஒரு நினைவு கூறல் தான். பெரும்பாலும் கொடியேற்றுதல், தேசியகீதம் பாடுதல், இனிப்புகளை பரிமாறுதல், அரை அல்லது முழு நாள் விடுமுறை என்பதோடு கூடவே 'உலக தொலைக்காட்சி வரலா......'ரக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று அந்த 'நினைவு கூறல்' இனிதே நிறைவடைந்துவிடும்'
சுதந்திர தினம் என்பது இப்படித்தான் இருந்தது எனக்கு.
ஆனால் சிங்கப்பூரை பொறுத்தவரை அது ஆண்டின் மிகக் கோலாகலமான பண்டிகை. சிங்கப்பூரின் பிறந்தநாள்.இங்கே அது வெறும் சுதந்திர தினம் அல்ல,இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அவ்வளவு ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் கொண்டாடும் தேசிய தினம். தினம் மட்டுமல்ல. தேசிய வாரம் தேசிய மாதம் என்று கொண்டாடுகின்றார்கள்.
ஒரு முறை தேசிய தினம் பற்றி பேசிப்பாருங்களேன். இளைஞர்கள் முகத்தில் நிம்மதியான வாழ்வுக்கான நன்றி நிரம்பித்தளும்பும். முதியோர்களிடம் பல்லாண்டு களைப்பை மீறிய வெற்றிப் பெருமிதம் மிளிரும்.
இதற்கெல்லாம் ஒற்றைக்காரணம் தான்.
அது "திரு. லீ குவான் யூ" தலைமையிலான இந்த நாட்டின் முன்னோடித் தலைமுறையினர் தான்.
இந்த வருடம் தேசிய தினத்தை ஒட்டி சிலோன் சாலை ஸ்ரீ செண்பக விநாயகர் கோவிலில் "எங்கள் தந்தை லீ" என்ற தலைப்பில் ஒரு நாட்டிய நிகழ்வு இருப்பதாக அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது.
பொதுவாக பரதநாட்டியத்தை பொறுத்தவரையில் புராண, இதிகாச, இலக்கிய கதைகளில் உரையாடலுடன் கூடிய சம்பவங்கள் பல இருப்பதால் அபிநயத்துக்கான வெளி இருக்கும். ஆனால் ஒருவருடைய அரசியல் வாழ்க்கை வரலாற்றை நாட்டியமாக அரங்கேற்றுவது எப்படி சாத்தியம் என்பது ஒன்றே என் ஆவலைத்தூண்டியது.
எனக்கு சிங்கப்பூரின் வரலாறு தெரியாது. இந்த கதையின் படி காலனித்துவத்துக்கு எதிராக போரிட்டு வென்ற சிங்கப்பூர், நாட்டின் வளர்ச்சிக்காக மலாயாவுடன் இணைகின்றது.
பின்பு மலேசியாவுடனான அரசியல் சிக்கல்களால் பல மோசமான கலவரங்களுக்குப் பிறகு பிரிந்து தனி நாடாக நிற்கின்றது.
"குறைப் பிரசவத்தில் குற்றுயிராய் பிய்த்தெறியப்பட்டு வெறும் தசைப்பிண்டமாய் சிதறிய சிறு தீவு"
என்பதுதான் எத்துணை சரியான உவமை.
எந்த விதமான வளமும் இல்லாமல் இன்னொருவரை சார்ந்து நிற்க வேண்டிய சூழலில் சிங்கப்பூர் அன்று இருந்தது.
தன்னை சார்ந்திருந்த மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கான எல்லா வழிகளையும் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் திரு.லீ இருந்தார்.
வெறும் பூச்சியத்திலிருந்து மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு,சர்வதேச மேடையில் சிங்கப்பூருக்கு இன்றிருக்கும் அங்கீகாரத்தை பெற்றுத்தந்தார் என்று நாட்டிய நாடகம் முடிகின்றது.
நடனம் சிறப்பாகவே இருந்தது. குறையாக சொல்ல ஒன்றுமே இல்லை. கற்றுத்தந்ததை மிக மிக அருமையாக வெளிப்படுத்தி இருந்தார்கள்.
ஆனால் எனக்கென்னவோ கதை தெளிவில்லாமல் இருந்ததாகத் தோன்றியது. மேம்போக்காக மேடையேற்றப்பட்டது போல இருந்தது. இரண்டு கதை சொல்லிகள், மக்களென்று காட்ட சில சிறுமிகள் அவ்வளவே தான் கதாபாத்திரங்கள்.
வாழ்க்கை வரலாறொன்றில் சம்பவங்கள் தெளிவாக நமக்குத் தெரிந்திருக்காது. ஆனால் சரித்திர நாவல்களின் பாணியில் கொஞ்சம் கற்பனைத்திறனோடு சம்பவங்களை உருவாக்கி இருக்கலாம். சில சஞ்சாரிகளை பயன்படுத்தி கூட கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி இருக்கலாம்.
இன்னதென்று தெரியாத ஒரு தொய்வு நாட்டிய அமைப்பில் இருந்ததாக எனக்குத் தோன்றியது.
பின்பு விசாரித்ததில் பெரிதாக எழுதப்பட்ட ஒரு கதை நேரமின்மையால் சுருக்கப்பட்டதாக அறிந்தேன். சலிப்பாக இருந்தது.
ஒரு படைப்பாளியை (அது கலைஞரோ, எழுத்தாளரோ) எரிச்சலடைய செய்ய வேண்டுமென்றால் விமர்சனமெல்லாம் செய்ய வேண்டாம். இது போன்ற கத்தரிக்கும் கட்டுப்பாடுகளே போதும்.
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்த ஒரு நாடு, வெறும் ஐம்பதே ஆண்டுகளில் உலகின் தவிர்க்க முடியாத ஒரு மிகப்பெரிய ஆளுமையாக உருவான ஆச்சர்யமூட்டும் கதையை, மேலோட்டமாக சொல்லிவிட்டு செல்வது அநியாயம் அல்ல துரோகம் அல்லவா? சிங்கப்பூரின் முக்கியமான வளர்ச்சிப்படிகள் அழுத்தமாக சொல்லப்பட வேண்டும். அதுதான் அந்த தலைமுறையினருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதையும் நன்றியும்.
சுய நல அரசியல் மலிந்து கிடக்கும் இன்றைய சமுதாயத்தில் நாம் வாழும் காலத்தின் சரியான தலைவர்களை கண்டறிவது என்பது, மிளகுக் குவியலில் பப்பாளி விதையை கண்டறிவது போன்றது. இன்றைய தலைவர்களை வலைத்தளங்களில் விமர்சிப்பதோடு நம்முடைய சமுதாயக்கடமை முடிந்து விடுகின்றது. நேர்மையான வாக்குரிமைக்கான வாய்ப்பே இல்லாதிருக்கின்றது.
இப்படிப்பட்ட சூழலில் அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் சேவை மனப்பான்மையுடனும் செயல்பட்ட மகோன்னதமான தலைவர்களுடைய கதைகளை பெரியவர்களை விட குழந்தைகளே அறிய வேண்டும். நாளைய சமுதாயத்தின் அரசியல் சார்ந்த தீர்க்கமான சிந்தனைகள் அவர்கள் ஆழ்மனங்களில் உருவாக்கப்பட வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாகும்.
ஏற்கனவே திரைப்படங்களுக்கு தணிக்கை வந்தாயிற்று. தொலைக்காட்சிக்கு தணிக்கை தேவையாக இருக்கின்றது.போகின்ற போக்கை பார்த்தால் புத்தகங்களுக்கும் வெகு சீக்கிரம் தணிக்கை வந்து விடும். இணையம், அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
ஆகவே எதிர்காலத்தில் நல்ல தலைவர்களையும் பொறுப்புணர்வு மிக்க குடிமக்களையும் உருவாக்க நமக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி இது போன்ற நாட்டியங்களும் மேடை நாடகங்களும் தான். இதன் வழி இலகுவாக நேர்மறையான அரசியல் அணுகுமுறையை நாம் அவர்களுக்கு அறிமுகப்படுத்த முடியும். குழந்தைகளும் சுவாரஸ்யமாய் ரசிக்கக்கூடும்.
ஆனால் இந்த கத்தரிப்பு தொல்லைகள் நோக்கத்தை சிதறடித்து விடும்.
எனவே "எங்கள் தந்தை லீ" யை முழு நீள கலை வண்ணமாக பார்க்க ஆர்வமாக இருக்கின்றேன். இந்த ஏமாற்றம் அப்போது தான் சரியாகும்.
ஒரு வேளை இந்த வகை கலைப்புரட்சிக்கு அது ஒரு முன்னோடியாகவும் இருக்கலாம்.
September 16, 2017

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக