புரிதலின் பரிதவிப்பு

நாக்கெனும் மொட்டு அவிழ்ந்து
வாக்கெனும் மலர் அரும்பும் காலத்தில்

எப்படியாவது புரியவைத்துவிடும் 
முனைப்பில் அவளும்
ஒவ்வொரு சொல்லையும்
ஒரு ஆயிரம் முறை
சொல்லிக்காட்டுகிறாள்

எப்படியாவது புரிந்து கொண்டுவிடும் பதற்றத்தில் நானும்
இதுவா அதுவா என்று
மாற்றி மாற்றி கேட்டுப்பார்க்கிறேன்.

பரிதவித்துக் களைத்துப்போய்
மன்னித்துவிடம்மா என்று கெஞ்சுகையில்
பரிதவித்துக் களைத்தும்
மன்...னித்துவி...டம்மா என்று சொல்லிப்பார்ப்பவளிடம்
தோற்றுப்போன தாய்மைக்கான
மன்னிப்பை எப்படி இறைஞ்சுவேன்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக