நான் படித்த பெரும்பாலான ஈழத்து இலக்கியப்படைப்புகளில் யுத்தத்தின் சாயல் ஏதோ ஒரு வகையில் சிறிதளவேனும் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால் இனப்பிரசினை ஏற்படுவதற்கு ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டிருப்பதால், அ.முத்துலிங்கத்தின் "அக்கா", போருக்கு அப்பாற்ப்பட்ட யாழ்ப்பாணத்தின் வாழ்வியலைப்பேசும் குறிப்பிடத்தக்க படைப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
இரண்டு கதைகள் மனதை பிழிந்து எடுத்தன என்று தான் சொல்ல வேண்டும். அவற்றுள் ஒன்று "இருப்பிடம்". புத்தி தெளிவற்றவன் என்றும் வரையறுக்க முடியாத, இயல்பான மனிதன் என்றும் சொல்ல முடியாத ஒரு மனிதனின் கதை அது. எந்த வேலையையும் அசராமல் திறம்பட அவன் செய்து முடிக்க எப்போதும் அவன் தயாராய் இருந்த போதும் அந்த ஊர் அவனை பைத்தியம் என்றே சொல்கின்றது. அழுக்காறு ஏதுமற்ற நிர்மலமான முகத்தோடும் மனத்தோடும் அவனுக்கெதிரான எல்லாவற்றையும் சிரித்தபடியே ஏற்றுக்கொள்ளும் அவன், தேர்க்காலில் இடிபட்டு இறந்து போகிறான். ஆனால் தேர்த்திருவிழாவுக்காக ஒரு உயிர் போனதைப் பற்றி எந்த பிரக்ஞையுமற்ற மக்களுக்கோ தேர் ஒரு வழியாய் இருப்பிடத்தை சென்றடைந்த திருப்தி. எவ்வளவு அருவெறுப்பான அலட்சியம் இது? கடவுளை நேசிக்க கடவுளின் பிரத்தியேகமான குழந்தையை பலியிடுவது என்ன ஒரு வேதனையான முரண்?
பூப்புனித நீராட்டு விழா எல்லா பிரதேச தமிழரிடையேயும் நிலவும் பரவலான ஒரு மரபு. கொடுக்கல் வாங்கல் நோக்கத்தில் விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு அனாவசியமான சடங்கு. ஆனால் பூப்பெய்தும் சிறுமியருக்கோ அது ஒரு கொண்டாட்டம். சர்வ அலங்கார பூஜிதையாய், விழா நாயகியாய் கொலு வீற்றிருக்கும் ஒரு பெருமையான தருணம். ஆனால் அதைத் தாண்டி, அவர்களுக்கு பூப்பெய்த்துவதன் நன்மை தீமைகள் தெளிவாக புரியவைக்கப்படுகின்றனவா என்பது இன்னமும் ஒரு கேள்விக்குறிதான். 50 ஆண்டுகளுக்குப்பின்னும் இப்போதும் இது போன்ற சடங்குகள் பெரும் விளம்பரப்படுத்தல்களோடு இடம்பெறுவது உண்மையில் வேதனையான விஷயம். "பக்குவம்" கதை இதைத்தான் சொல்கின்றது. இரண்டு சகோதரிகள் குடும்பத்தாலும் சூழலாலும் புற உருவ காரணங்களுக்காக பாகுபடுத்தப்படுவதை சுட்டிக்காட்டும் கதை இது. அழகுக்காகவும், அதன் மேல் சமூகத்துக்கு இருக்கும் ஈர்ப்பாலும் கவரப்படும் ஒரு சிறுமியின் ஆழ்மன ஏக்கங்களையும் உணர்வுகளையும் விபரீதத்தை விளைவிக்ககூடிய பிரச்சினைகளுக்கான சாத்தியக்கூறுகளை முழுமையாய் முன் வைக்கும் ஒரு கதை இது.
பெரும்பாலும் சிறுகதைகள் சில விவரணைகள், உரையாடல்கள் என்பவற்றைக் கொண்டு பின்னப்பட்டு சில சம்பவங்களையும் அவற்றின் திருப்புமுனைகளையும் சொல்லும். அநேகமானவை படர்க்கை கதை சொல்லி பாணியில் இருக்கும். ஆனால் இந்தத்தொகுப்பிலுள்ள இரண்டு கதைகள் அந்த பாணியை சற்று மாற்றி இருக்கின்றன என்பது தான் என் வரையில் இந்த தொகுப்பிலுள்ள ஆச்சரியமான அம்சம். ஒரு பெண் பார்க்கும் படலத்தையும் அது சார்ந்த நடைமுறை நிகழ்வுகளையும் அந்த பெண்ணின் தம்பியின் பார்வையிலிருந்து சொல்லும் கதை "அக்கா". தான் உணர்ந்தவற்றையும் பெரியவர்கள் பேசுபவற்றையும் ஒரு நாடகுறிப்பெழுதும் பாங்கில் அந்த சிறுவன் சொல்கிறான். இதே பாணியில் வேறொரு நிகழ்வொன்றை படர்க்கையில் சொல்கின்றது "ஒரு சிறுவனின் கதை". இது ஒரு வித்தியாசமான ஒரு அழகியல் அனுபவமாக இருந்தது.
"அழைப்பு" கொக்குவில்லில் பிரபலமான தொழிற்துறையாகக் கருதப்படும் சுருட்டுத் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கின்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஒரு தந்தையின் மனா அவலங்கள் அனைத்தையும் பதிவு செயகின்றது.
பல்லின மக்கள் வாழும் நாடொன்றில் இரு வேறு இனத்தவர்கள் இருவருக்கிடையிலான காதல் மிகவும் சகஜமான ஒன்று. இப்போதெல்லாம் அவை திருமணத்தில் முடிந்தாலும் அப்போது அவை வெறும் ஈர்ப்போடு முடிவடைந்து விட்டிருக்கவேண்டும். அப்படி ஒரு கதை "அனுலா"
"ஊர்வலம்" என்ற ஒரு கதை, விபரம் புரியாத இளம் வயதிலிருந்து அன்பு செலுத்தி ஒன்றாகவே வளர்ந்த ஒரு முறைப்பையனை விடுத்து சில சமூக அந்தஸ்து காரணங்களுக்காக வேறு ஒருவரை மணக்கும் ஒரு பெண் திருமண நாளன்று குற்ற உணர்சசியில் தவிப்பதாக வருகின்றது. இருதலைக்கொள்ளி எறும்பாக தன் வாழ்வை தொடரத்தலைப்படுவதாக முடிகின்றது. இது முற்றிலும் அபத்தமான கருத்தியல். எல்லோர் வாழ்விலும் பழைய காதலோ ஈர்ப்போ நிச்சயம் இருக்கும். அதே போல அதை தவிர்த்து விட்டு வேறு திருமண வாழ்வை ஏற்றுக்கொள்வதற்கான நியாயமான காரணமும் இருக்கும். அப்படி இருக்க பழைய வாழ்வின் எச்சங்களை சுமந்து கொண்டு தான் எஞ்சிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நிர்ணயித்தால் இந்த உலகில் ஒருவருமே, கவனிக்க ஒருவர் கூட நிம்மதியாய் வாழ முடியாது என்பது தான் நிதர்சனம்.
"கோடைமழை" கதையின் கரு, வயதான ஒரு பாட்டி நகைகளுக்கு பணம் மாற்றித்தருவதையும் அதில் ஏற்படும் ஏமாறல், ஏமாற்றல்கள் பற்றியது. விதைத்த வினையை அறுப்பது பாணி கதை. ஆனால் கொக்குவில் என்கின்ற ஒரு ஊரைப்பற்றிய மிக நீ.....ண்ட வர்ணனை தேவையில்லாத சேர்க்கையாகத்தான் இருந்தது.தவிரவும் அது தெளிவாகவும் இல்லை. ஆனால், நாகரிக மாற்றத்திற்கேற்ப சுவாமிப்படங்களில் பெண் தெய்வங்களில் ஆடை அலங்காரங்களும் மாறுவதை நகைச்சுவையாக சுட்டிக்காட்டி இருப்பது யதார்த்தம்.
சமூக ரீதியாக குழப்பங்களை தவிர்க்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் குடும்ப கட்டமைப்பு முறையை உடைக்கும் வகையிலான சில பிறழ்வுகளையும் அது சார்ந்த பிரச்சினைகளையும் பேசுகின்றன சில கதைகள். இவை விழிப்புணர்வு நோக்கில் எழுதப்பட்டிருந்தாலும் மறுபுறம் இவை எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய "சொல்வதெல்லாம் உண்மை" ரகக் கதைகள்.
இது அ.முத்துலிங்கத்தின் "அக்கா" சிறுகதை தொகுப்பு குறித்தான எனது பார்வை. ஒரு நூல் எழுதப்பட்டு அரை நுற்றாண்டுக்குப் பிறகு அதைப் பற்றி விமர்சனம் செய்வது கடினமான விஷயம். இந்த ஐம்பது வருடங்களில் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்கள் உலகளாவிய ரீதியில் நடந்தேறி இருக்கின்றன. பல கொள்கையியல் வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் யாழ்ப்பாணம் போன்ற ஒரு இறுக்கமான சமூகக்கட்டுப்பாடு கொண்ட பிரதேசத்தில் இருந்து, நிறைய முற்போக்கான விஷயங்களை தன் இருபதுகளில் தைரியமாக எழுதி இருக்கின்றார் என்றால் அது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அர்த்தமற்ற இலக்கிய சர்ச்சைகளை ஏற்படுத்த "Facebook" போன்ற கவனக்கலைப்பான்கள் இல்லாதது தான் அக்காலத்தில் காத்திரமான படைப்புகள் வெளிவர காரணமாயிருந்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக