அவசர அவசரமாக
தோல் உரிக்கப்பட்டு
பலிக்கு முன்பான
திருக்குளியலுக்காக
குளத்தில் குதித்த
சமண உணவு எதிரிகளை
தன் இரண்டு கைகளின்
பிஞ்சு விரல்களாலும்
சுற்றி சுற்றி ஓட விட்டு
சிரித்து களித்தபடி
"வெங்காய சுத்தி,வெங்காய சுத்தி"
என்கின்றது மழலையின் மொழி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக