நிறைமாத கருமேகத்தின்
பனிக்குட முதல் சொட்டுக்கள்,
புவியீர்ப்பின் உயர் அழுத்தத்தில்
புலரி உறக்கத்தின் சுகம் கலைத்த
அதிர்ச்சியில் நதிக்குழந்தை எழுந்து
சிணுங்கி கட்டிலெங்கும் அலைந்து....
இப்படி நான் என்னவோ யோசித்துக்கொண்டிருக்க
"அம்மா தண்ணி சி(ரி)க்குது"
என்று மழைக்கவிதை சொல்லிற்று
என் மழலைக்கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக