உலகின் அபிவிருத்தி அடைந்த முதல் தர நாடுகளில் ஒன்று என்கின்ற கேள்விஞானத்தோடு முதன் முறை நான் சிங்கப்பூருக்கு வந்தபோது, சாங்கி விமான நிலையத்தில் தள்ளுவண்டியை தள்ளியபடி தள்ளாடிக்கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க ஊழியரை எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கின்றது.
அங்கு மட்டுமல்ல, உணவகங்களில் மேசையை துடைத்துக்கொண்டும், பல் பொருள் அங்காடிகளில் விற்பனைப்பொருட்களை அடுக்கியபடியும், பின்னிரவுகளிலும் வாடகைவண்டிகளை ஒட்டியவாறும் உழைக்கும் பல தாத்தா பாட்டிகளை பார்க்கும் போதெல்லாம், இந்த நிலைக்கு பிள்ளைகளின் இன்றைய சுயநலமா இல்லை பெற்றோரின் அன்றைய புறக்கணிப்பா காரணம் என்கின்ற ஒரு பெரிய கேள்வி மனதில் எழும்.
சிங்கப்பூரின் சிறப்பான அடையாளங்கள் பலவற்றோடு கசப்பான அடையாளமாக இருக்கும் இந்த அவலச்சுவையை யதார்த்தமாக சொல்கின்றது "புளொக் 188ம் முசாங் கிங்கும்".
முதுமையின் சவால்கள் எதிர்கொள்ள மிகக்கடினமானவை. அதில் முதன்மையானது உடலின் இயலாமை.பிள்ளைகளால் தனித்து விடப்பட்ட வயதான தம்பதி தம் வாழ்வை கொண்டு நடத்த அந்த இயலாமையிலும் உழைக்கின்றார்கள்.
இந்த உலகில் குருதியின் தொடர்புக்கு அப்பாலும் மனிதம் உயிர்ப்புடன் தான் இருக்கின்றது என்பதற்கு சாட்சியாக இருக்கும் அயலவர்களின் ஆதுரத்தில் இறப்பை நோக்கிய அவர்களின் கால நகர்த்தல் தான் இந்த கதை.
இதுவரை நான் வாசித்த சிங்கப்பூரை களமாகக்கொண்ட தமிழ் இலக்கியங்களில் “சிங்கப்பூரின் மண்வாசனை கதை” என்று நான் வரையறுக்கக்கூடியதாக இது தான் இருக்கும். எந்த ஒரு இடத்திலும் தமிழ் நாட்டின் தாக்கமோ சாயலோ இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதையோட்டம் தான் இதன் சிறப்பான தன்மை.
வார்த்தைக்கு வார்த்தை சிங்கப்பூரின் மணம் திகழ்கின்றது. பெயர்களும் இடங்களும் பேச்சும் என்று அச்சு அசலான சிங்கப்பூரின் கதை.
இந்த கதையில் துரியன் பழம் வருகின்றது. சிங்கப்பூரில் அது மிகப்பிரசித்தம். உண்மையிலேயே அந்த பழத்தின் மணம் கொஞ்சம் நாசிக்கு உவப்பற்றது தான். ஆனால் நாவுக்கு உவப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்த கதையின் நாயகன் அந்த பழத்தின் முதல் சுளையை தயங்கித் தயங்கி சுவைத்து ரசித்து சாப்பிடுவதை கதாசிரியரின் வர்ணனையில் படிக்கும் போது துரியன் மீது பாசம் பாசமாக வருகின்றது.
கதையின் கதாபாத்திரங்களில் ஒன்று பச்சைகல் மோதிரம். அந்த முதிய அன்றில் பறவைளுக்கிடையிலான அன்னியோன்னியத்தின் இழையை அன்பின் மணிகளால் கோர்த்த அந்த அஃறிணை, விடைபெறுதலுக்கான ஓட்டப்பந்தயத்தின் வெற்றியையும் நிர்ணயித்து விடுகின்றது.
கதையின் முதல் பகுதியில் ‘சென்றேன், வந்தார்’ ரகமான வசனங்கள் கொஞ்சம் சலிப்பூட்டின. மற்றும் ஒருமை பன்மை பிழைகள் சில இருந்தன. அவற்றை தவிர்த்திருக்கலாம்.
ஆனால் இவற்றுக்கப்பால் வாழ்க்கையின் நிலையாமையையும் அன்பின் மகா சக்தியையும் மானுடத்தின் அத்தியாவசியத்தையும் மனதில் ஆழப்பதித்து விடுகின்றது இந்த கதை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக