பலநூறு பேரை பின்னிருத்தி வென்ற ஒன்றும்
சிலநூறு முறை சிதைந்தெழுந்த ஒன்றுமான
கலக்கூறுகள் இரண்டின் மோட்ச சந்திப்பில்
நலப்பேறு பெற்றது கூடடைந்த ஒரு ஆன்மா
குருதித்துளிகளில் காற்றோடு உணவும் உண்டு
கருப்பைதூளியில் மிதந்து வளர்ந்து நிறைந்து
வருத்தி வெளியேறி விழி மடல் அவிழ்த்தபோது
பெருங்களிப்புற்ற புவியீர்ப்புக்குள் அகப்பட்டது
இம்மையின் மாற்ற மாறிலியோடு இசைவாகி
அம்மையெனும் மாயத்தூய்மையில் சுயம்விட்டு
கைம்மையின் கோர அன்பில் கசங்கி முதுமை
வெம்மை தாளாது மறுமைக்கூடு தேடி பறந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக