தென்றலின் மெல்லிய தொடுகைக்கே சட்டென்று இதழ் உதிர்த்து விடும் ரோஜா செடியொன்றில் பல வருடங்களுக்குப் பின்பு முதன் முறையாய் பூத்த ஒரு ரோஜாவை அதீதமான கவனத்துடனும் ஒரு தவ மனநிலையோடும் மிக மிருதுவாய் பிடித்து, கன்னத்தில் முத்தமிட வைத்து எப்போதேனும் பரவசப்பட்டிருக்கின்றீர்களா?
நெசவாளன் ஒருவன் மிகுந்த பிரயத்தனப்பட்டு தானே பட்டுப்பூச்சியை வளர்த்து, இழையெடுத்து தன் சொந்த கைத்தறியில் தன் திறமையெல்லாம் ஒன்று திரட்டி ஆத்மார்த்தமாய் உழைத்து நெய்த முதல் பட்டுத்துணியை, தோல் பிரச்சினைகள் ஏதும் இல்லாத பிஞ்சு விரல்களால் நுண்மையாய் தடவிப் பார்த்த தெய்வீக தருணம் ஞாபகத்தில் இருக்கின்றதா?
என் அம்மாவின் மகளாக அவதரித்த என் முதல் குழந்தையை, பத்து வயது சிறுமியின் பயத்தோடும் பரபரப்போடும் குதூகலத்தோடும் தடவிப்பார்த்து, அவள் கால் விரல்களை கன்னத்தில் பதித்த போது அப்படித்தான் இருந்தது எனக்கு. பச்சிளங் குழந்தையாய் அவளை பார்த்த அந்த கணத்தை எப்போதும் மறக்க முடியாது என்னால்.
(பல வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் மாலையில் நானும் தங்கச்சியும் மண்ணை முத்தமிட்ட உடலோடும் மண்ணுடன் உரையாடிய உடையோடும் அளவுகடந்த ஆர்வத்தோடும் அவளை பார்க்க வைத்திய சாலைக்கு சென்றோம் என்பது அம்மா இப்போதும் சொல்லிச் சொல்லி சிரிக்கும் ஒரு வரலாற்று நகைச்சுவை)
இரண்டால் பிரிபடும் இரட்டைப்படை எண்ணிக்கையில் இருந்த எங்கள் குடும்பத்தை எப்போதும் பிரிக்க முடியாத ஒற்றைப்படை எண்ணாக மாட்டிய தேவதை அவள். எண்ணிக்கையில் மட்டுமல்ல எண்ணத்திலும் தான்.
"நீங்க ஏன் அக்கா அப்புடி சொன்னீங்க?அப்பா பாவம் தானே", "அக்கா தானே அம்மா சொன்னாங்க, விடுங்க", "இனிமே அக்கா கிட்ட அப்புடி பேசாதீங்க தத்துக்கா","அவங்க வேற யாருகிட்ட போய் சொல்லுவாங்க சுஜுக்கா", "என் அப்பா,அம்மா, அக்காவுங்கள பத்தி யாராவது ஏதாவது சொன்ன நான் வாய் வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்,அப்புறம் என்ன யாரும் குத்தம் சொல்லக்கூடாது சொல்லிட்டேன்"
கடைக்குட்டி என்றாலும் கூட சற்றேனும் சலிக்காமல் முடிவிலி முறை இப்படி எதையாவது மாற்றி மாற்றி சொல்லியபடி எங்களை நால்வரையும் இணைக்கின்ற புள்ளியாய் உறுதியாய் தாங்கும் ஆணிவேராக இப்போதும் இருப்பவள் அவள் தான். அவளால் தான், அவள் வரவால் தான், எத்தனை பஞ்சத்திலும் புயலிலும் எங்கள் குடும்பம் அசராமல் அமைதியாய் இருக்கின்றது.
மேற்படிப்புக்காக முதன் முறை அவள் தனியே சென்று விடுதியில் தங்கியபோதெல்லாம், ஏதாவது ஒரு பிரச்சினை என்று சொன்னால், நீ தனியே உன் பிரச்சினைகளை பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருப்பேன். (அது என் அனுபவ பாடம்) ஆனாலும் அந்த ஒவ்வொரு துன்பத்தையும் அவள் கடந்து வரும் வரை எனக்கு மூச்சு முட்டிக்கொண்டே இருக்கும்.
ஆனால் அவளுடைய அசாத்திய பொறுமைதான் அவளுக்கான அத்தனை பலமாகவும் இருந்து வாழ்வின் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு, மைல்கற்களை வெற்றிகரமாக கடந்து செல்ல துணையாக இருக்கின்றது என்பதில் எந்த ஐயமும் இல்லை. பொறுமையிலும், சகிப்புத்தன்மையிலும், பகிர்தலும், பாசத்திலும் தனக்குத்தானே நிகரான அவள் எனக்கும் தங்கச்சிக்கும் இந்த விஷயத்தில் பேராசிரியை தான்.
எங்கள் மூவருடைய படிப்பு, வேலை, திருமணம் என்று பல காரணங்களால் நாங்கள் ஐந்து பேரும் சேர்ந்திருந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டன. எல்லா பிறந்த நாட்களும் யாராவது ஒருவராவது இல்லாமலேயே பல வருடங்களாக கடந்து போய்க் கொண்டிருக்கின்றன. இம்முறையும் அப்படித்தான். அவள் கல்லூரி சுற்றுலா சென்றிருந்ததால் அழைத்துப்பேசக்கூட முடியாமல் போய் விட்டது. ஏன் இந்த பதிவு கூட பல காரணங்களால் தாமதித்துத்தான் போய் விட்டது. சகோத'ரி'களை வாழ்க்கை ஒரு முறை பிரித்தால், காலம் என்றேனும் ஒருநாள் இணைத்தால் தான் உண்டு.
இந்த பிரிவுக்கும் இணைப்புக்கு இடையே அவளை ஒவ்வொரு முறை நினைக்கும் போதும், நெஞ்சோடு அணைத்துக்கொள்ளத்தோன்றும் அந்த தாய்மை உணர்வு மட்டும் எப்போதும் மாறுவதில்லை.
நான் படித்த வாசகங்களில் எப்போதும் எனக்குப்பிடித்த ஒரு வாசகம் இருக்கின்றது, நா.பா வின் "பொன் விலங்கு" நாவலின் நாயகனை அவர் இப்படி வர்ணிப்பார்,
"சுகதுக்கங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையின் முடிவற்ற பாதையில் இன்னும் ஓர் அடி முன்னால் எடுத்து வைக்க எப்போதும் நான் என்றுமே தயார் என்பது போல வலது பாதம் முன்னிருக்க நிமிர்ந்து உட்காரும்....."
இப்படியான நிறைவான, நேர்மையான வாழ்வைத் தவிர உனக்கான என் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் வேறு ஒன்றுமில்லை பாத்தும்மா !
Belated Birthday wishes Bathu ma !
December 15, 2017

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக