இறுதி மூச்சு

தொடர்மாடி தாழ்வாரத்தோடு
ஒட்டியிருந்த சுவரை 
தொட்டபடி இருந்த கிளை
சொட்டிய கடைசித்துளி கண்ணீரோடு
'நட்டு வளர்த்த கையால் என்னை நீ
வெட்டி எறிந்தது வெளிச்சத்தை
கட்டிப்போடுகின்றேன் என்றா?' என்றது.
'பட்டுப்போய் விடாமல் நீ விண்ணை
எட்டிப்பிடிக்கத்தான்' என்பதற்குள்
முட்டிக்கொண்டிருந்த அதன் மூச்சு
விட்டுப்போயிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக