விளையாட்டு மைதான சீசோவில்
இணையில்லையென்ற
குழந்தையின் ஏக்கத்தை
தீர்த்து வைக்கின்றது
அம்மாவின் கைகள்
மறுபுற இருக்கையில்
தந்த அழுத்த விசை.
குதூகலம் ஒருபுறம்
நிறைய நிறைய
கலோரிகள் மறுபுறம்
கரையக் கரைய
இளங்காலை சூரியன்
தழுவிய நிஜத்துக்கும்
தெறித்த நிழலுக்கும் இடையே
சமாந்திரமாய் ஒரு மௌன
சம்பாஷணை நிகழ்கின்றது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக