நவீன தமிழிலக்கிய அறிமுகம்

முதன் முறை என்பது வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே வரும் என்பதால் அது சரித்திரத்தின் அதிசயம் என்னும் அடையாளத்தை பெறுகின்றது. அப்படி அதிசயங்கள் என் வாழ்வில் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கின்றன போலும்.

முதன் முறை நாடு தழுவிய ஒரு பொதுப் பரீட்சையை எழுதியது,

முதன் முறை விமானப் பயணம்,

முதன் முறை விடுதி வாசம்,

முதன் முறை கவிதை போட்டியில் வென்றது,

முதன் முறை நடனமாட மேடை ஏறியது,

முதன் முறை எழுதிய சிறுகதை,,,,, இப்படி அந்த பட்டியல் நீள்கிறது.

அந்த வகையில் அதிக முதன் முறைகளை கொண்ட வருடம் 2017 என்றே எனக்குத் தோன்றுகின்றது.

முதன் முறை ஒரு இலக்கியக்கூட்டத்தில் பங்கேற்றேன்.

முதன் முறை கப்பல் பயணம் சென்றேன்.

முதன் முறை இலக்கியம் பற்றி விவாதிக்கவும், கலந்துரையாடவும் ஆர்வமுள்ள நண்பர் குழு ஒன்று கிடைத்திருக்கின்றது.

முதன் முறை திரைப்படங்கள், மேடை நிகழ்ச்சிகள், புத்தகங்கள் குறித்து பார்த்த, படித்த, ரசித்த, வெறுத்த, கற்ற அனுபவங்களை எழுதி இருக்கின்றேன்.

முதன் முறை புத்தகப்பரிசை வென்றிருக்கின்றேன்.

இப்படி பல முதன் முறைகள்.

ஆனால் இவற்றை எல்லாம் விட என் மனதுக்கு நெருக்கமான ஒரு விஷயத்தை முதன் முறையாக செய்திருக்கின்றேன்.

என் வாழ்வினை உருவாக்கி, பகிர்ந்து, செதுக்கி, செப்பனிட்டு, உடனிருந்து எனக்கென்ற ஒரு அடையாளத்தை அல்லது “நான்” என்ற ஒன்றை படைத்து என் இன்பத்தில் உண்மையாகவே மகிழ்ந்து துன்பத்தில் தூய்மையாகவே வருந்தி இந்த அகிலத்தில் என் இருப்பை நிலைத்திருக்கச் செய்யும் அத்தனை பேரிடமும் மனப்பூர்வமாக என்னவெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேனோ அதையெல்லாம் முழுமையாக சொல்லி இருக்கின்றேன். மனம் இலேசானதாக உணர்கிறேன்.

இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே இதுவரை நான் வாழ்ந்த வாழ்வில் 2017 அர்த்தமுள்ள ஒன்றாக அமைந்து விட்டது !

அன்பும் அன்பின் பரிமாற்றமும் தானே இந்த பிரபஞ்சத்தின் கூறுகளை ஒன்றோடு ஒன்று பிரிந்துவிடாமல் பிணைக்கும் சக்திகளாக இருக்கின்றன !

2017 இன் ஆரம்பத்தில் 'கண்டதையும்' படிக்க வேண்டிய ஒரு சூழ்நிலை வந்த போது குழப்பத்தில் சோர்ந்து போனேன். 'கண்டது' இலிருந்து விடுபட்டு 'கண்டு' அதை எப்படி படிப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகவே என் முன்னால் இருந்தது. யாரிடம் கேட்பது, எப்படி தெளிவு பெறுவது என்று ஒன்றும் புரியாமலே அந்த வருடம் கழிந்தது.

2018 இன் முதலாம் நாளன்று வாசிப்பதற்காக கையிலெடுத்த முதல் புத்தகத்தின் பின்னட்டையில் எனக்குள் இருக்கும் அத்தனை கேள்விகளும் இருந்தன. வாசிப்பின் உற்சாகம் மீண்டும் தொற்றிக்கொண்டது. ஓரளவுக்கு அறிமுகம் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையோடும் இதிலிருந்தும் பகுத்தறிய வேண்டியது அவசியம் என்பதையும் உணர்ந்தே 2018 இற்கான வாசிப்பு இன்பமாக தொடங்கி இருக்கின்றது. புத்தகத்தை இரவல் தந்த நண்பர் சத்யாவுக்கும் பரிந்துரைத்த நண்பர் சிவாவுக்கும் நன்றிகள் பல.

ஆங் ! ஒரு முக்கியமான விஷயம் !

2018 இல் “முதன் முறையாக” ஒரு non fiction (இதற்கு என்ன தமிழ் வார்த்தை என்று தெரியவில்லை) நூலை ‘ஆர்வத்துடன்’ படிக்க எடுத்திருக்கின்றேன் 😊😊😊😊😂😂😂

Happy Reading and Writing for Myself!!!!

Happy New Year to you all!!



January 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக