காலையில் கதிரவன் எழுவதை பார்ப்பது என்பது நீண்ட நாட்களாகவே ஒரு கனவு. ஆனால் மலைகளும் மரங்களும் கட்டிடங்களும் நிறைந்த தரையில் இருந்தவரை தெளிவாக பார்க்க முடிந்ததில்லை. ஏன்? கடந்த மூன்று நாட்களாக வாய்ப்பு கிடைத்தும் கூட சோம்பேறித்தனத்தால் பார்க்கவில்லை.
நான்காம் நாள் எப்படியாவது பார்த்தே தீருவது என்று விடியத் தொடங்குகையில் எழுந்து மேல் தளம் சென்றேன். அப்போது தான் இருள் பிரிய ஆரம்பித்திருந்தது. கடற்காற்றும் பனிப்போர்வையும் கையில் கடல் புறாவுமாய் கிழக்கை நோக்கிக் காத்திருந்தேன்.
அம்மாவிடம் அடி வாங்கிவிட்டு, கதவின் பின்னால் ஒளிந்திருந்து மெது மெதுவாய் எட்டிப்பார்க்கும் சிறுமியின் பிஞ்சு முகமாய் தயங்கி தயங்கி வெளியேறினான் பகலவன். எந்த வித இடையூறுமின்றி நேரடியான அந்த சூரிய தரிசனத்தை என் உடல் தழுவிய பனிப்போர்வை விலகும்வரை கண்களுக்குள் நிறைத்து புதைத்துக்கொண்டேன். இளங்காலையில் வெம்மைதான் எத்தனை இதமானது.
அன்றைய காலை உணவு மிகவும் சலிப்பூட்டியது. கப்பலுக்குள் இருக்கின்ற பொதுவான மூன்று உணவகங்களுக்கு சமையலறை ஒன்று தான் போலிருக்கின்றது. எல்லாவற்றிலும் உணவின் சுவை ஒன்றாகவே இருந்தது. இந்திய உணவு என்றிருந்தது பெரும்பாலும் ஜெயின் உணவென்பதால் காரமான ருசிக்கு பழகிய நா சலித்துப்போய்விட்டது. ஆகவே, யாரேனும் கப்பல் பயணம் என்று திட்டமிடுவதாக இருந்தால், நான்கு நாட்களுக்கு மேல் திட்டமிட வேண்டாம் என்பது என்னுடைய ஆலோசனை.
அன்று காலை Bridge என்று சொல்லப்படுகின்ற கப்பல் கட்டுப்பாட்டு அறைக்கான 15 நிமிட பார்வையாளர் நேரம் இருந்தது. அந்த கப்பலின் தலைவர் சுவீடனை சேர்ந்தவர். அங்கிருந்த மீகாமர்கள் கருவிகளையும் அவற்றை செயல்படுத்தும் முறைகளையும் காலநிலை மற்றும் இயந்திரக் கோளாறுகளை எப்படி கண்டறிவார்கள் என்பதையெல்லாம் சொன்னார்கள். கப்பலின் இருபுறமும் கட்டப்பட்டிருக்கும், சுமார் 150 பேரை கொள்ளக்கூடிய 350 தொடக்கம் 500 வரையான சிறிய படகுகள் மூலம் ஆபத்துக்காலங்களில் பயணிகளை வெளியேற்றுவார்களாம். பொதுவாக நாங்கள் சென்ற கடற்பரப்பு குறுகியது என்பதால் இயந்திரக்கோளாறுகளைத் தவிர வேறு ஆபத்துகள் எதுவும் நடப்பதில்லை என்றார் தலைவர். சம்பிரதாயத்திற்கு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம்.
அன்றைய நாளில் வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை என்று ஹட்டன் நினைக்கின்றேன். இருந்தாலும் போக மனமிருக்கவில்லை. சலிப்பு தட்டி விட்டது. சிக்கிரம் வீடு திரும்ப வேண்டும் என்று தோன்றத் தொடங்கி விட்டது.சரி போகட்டும், முழு கப்பலையும் ஒரு முறை சுற்றி பார்க்கலாம் என்று கிளம்பினோம்.
கப்பலின் நான்காம் தளத்திற்கு மேலே தான் பயணிகளுக்கு நுழைவு அனுமதி இருந்தது. எட்டாம் தளம் வரை பயணிகள் அறைகள் தான் பெரும்பாலும் இருந்தன. அவற்றுள் ஆறாம் தளம் வரை திறந்த நடைபாதைகள் இல்லை என்பதால் வெறுமனே இரு புற நடை பாதையில் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை கப்பலின் உட்புறமாய் ஒரு நடை போக மட்டும் தான் முடிந்தது.
ஆறாம் தளம் தரையிலிருந்து கப்பலுக்குள் ஏறுவதற்கான வாசலை கொண்டிருக்கின்றது.
ஏழாம் தளத்தில் இருந்து தான் மேலே உள்ள தளங்களின் தான் திறந்த வெளி காட்சிக்கூடங்கள் தொடங்குகின்றன.ஏழாம் தளத்தில் உள்ள நடை பாதை Jogging Track. பயணிகள் அறைகள் சிலவும் கப்பலின் வரவேற்பறையும் அங்கு இருக்கின்றன.
எட்டாம் தளத்தின் முழுப்பகுதியையுமே அறைகள் ஆக்கிரமித்திருந்தன. இவை Balcony உடன் கூடிய அறைகள் என்பதால் திறந்த வெளி பாதைகள் எதுவும் இல்லை. ஆனால் ஏழாம் அல்லது ஒன்பதாம் தளத்திலிருந்து இரு முனைகளிலும் திறந்த வெளி காட்சிக்கூடம் இருப்பதால் கடலை ஏகாந்தமாய் ரசிக்க ஏதுவானவையாக இருந்தன. இதே போன்ற வசதி ஏழாம் மற்றும் ஒன்பதாம் தளங்களிலும் உண்டு.
ஒன்பதாம் தளத்தின் முற்பகுதியில் பயணிகள் அறைகள் இருந்தன. நடுப்பகுதியில் ஒரு உணவகமும் Duty Free வளாகமும் மதுபானக்கூடங்களும் இருந்தன. பிற்பகுதியில் மற்றுமொரு உணவகமும் நீச்சல் குளமும் இருந்தன.
பத்தாம் தளத்தின் முற்பகுதியில் அறைகள். அவற்றை அடுத்து Star Dust Lounge அரங்கம் , Maxims Lounge, சூதாட்டக்கூடங்கள் என்பவை இருந்தன. பின்புறம் Star Club அங்கத்தவர்களுக்கான பிரத்தியேகபி பிரதேசம்.
பதினோராம் தளத்தின் முற்பகுதியில் தான் கப்பலில் கட்டுப்பாட்டு அறை இருக்கின்றது. அதனை அடுத்து ஒரு சிறிய கூ டத்தில் அந்த கப்பலின் வரலாற்று ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை தொடர்ந்து சில அடுக்கு அறைகள். பின்பு குழந்தைகள் பராமரிப்பு நிலையமும் அங்கு தான் இருந்தது. நடுப்பகுதியிலும் பிற்பகுதியிலும் நீச்சல் குளங்கள். மீண்டும் உணவகங்கள், மதுக்கூடங்கள்,
பன்னிரண்டாவது தான் கூரையற்ற மேல் தளம். அங்கும் உணவகங்கள், நீச்சல் குளங்கள், இசைக்கச்சேரிகள் நடக்கும் சிறிய மேடை, Jacuzzi என்று இருந்தாலும், மற்ற தளங்களை விட இந்த தளம் அலாதியான அழகு கொண்டது. எங்கு திரும்பினாலும் குனிந்தாலும் கடல். மேலே வானம், எத்தனை வெயிலிலும் இதமான காற்று.
ஒரு வழியாக கப்பலை முழுமையாக பார்த்து முடித்த திருப்தி. மதிய உணவை உண்டு விட்டு, சற்று ஓய்வெடுத்தோம். மாலையில் அறையை காலி செய்து விட்டு, 12 ஆம் தளத்திற்கு வந்து தரை தொடுவதை எதிர் நோக்கிக்காத்திருந்தோம்.
என்னதான் ஒரே விஷயத்தை பார்த்தும் ருசித்தும் அலுத்துப்போயிருந்தாலும் அந்த மேல் தளத்தில் வசிப்பதற்காகவே இன்னும் சில நாட்கள் இருக்கலாம் போலிருந்தது. நன்கு முற்றி பழுத்த ஒரு மாங்கனியையும் ஒரு தக்காளியையும் ஒன்றாய் சேர்த்து கரை படிந்த சுவரொன்றில் வீசி எறிந்தது போல பகலவன் வானமெங்கும் தெறித்த படி மறையத்துவங்கினான்.
அப்போது எனக்குள் ஒரு அறிவார்த்தமான/மொக்கையான கேள்வி எழுந்தது. ஏன் எல்லா மொழிகளிலும் சூரியன் உதித்தது மறைந்தது என்று சொல்கின்றார்கள்? சரியாகப்பார்த்தால் பூமி கிழக்கை பார்த்தது மேற்கை பார்த்தது என்றல்லவா இருக்கவேண்டும்?
சிங்கப்புக்குறை நெருங்கத் தொடங்கியதும் இன்றாவது கப்பல் திரும்புவதை பார்த்து விட வேண்டுமென்று ஒன்பதாம் தளத்தின் முகப்புக்கு சென்றோம். ஆனால் கப்பல் திரும்பியதை கண்களாலோ உடம்பாலோ எந்த விதத்திலும் உணர முடிய வில்லை. ஊர்திகளின் அளவில் கப்பல் மிகப்பெரியது என்பதால் தெரியவில்லை போலும்.
சரி நிறுத்துவதையாவது பார்க்கலாம் என்று ஏழாம் தளத்துக்கு வந்தோம். கப்பலிலிருந்து மிகப்பிரம்மாண்டமான கயிறுகளை, குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்பட்ட துறைமுகத்தின் கரையிலிருக்கும் பிரம்மாண்டமான கொக்கிகளில்(அல்லது வளையமா என்று தெரியவில்லை) மாட்டி கரையை நோக்கி கப்பலை இழுத்தது எடுப்பது போலத்தான் எனக்குத்தோன்றியது. ஆனால் நங்கூரம் நங்கூரம் என்கிறார்களே? அது எப்படி இருக்கும்? எங்கே பாய்ச்சுவார்கள் என்பது கடைசி வரை தெரியவில்லை. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு வேளை மீகாமன் ஒரு பொத்தானை அழுத்தினாலே அந்த வேலை முடிந்து விடுமோ என்னவோ?
இப்படியாக எங்களின் கப்பல் பயணம் இனிதே நிறைவுக்கு வந்தது.
மீண்டும் ஒரு முறை செல்லும் ஆசை இருக்கின்றது தான். ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சாண்டில்யனின் கதை மாந்தர்கள் சென்றது போல சவால்களும் சாகசங்களும் கண்டுபிடிப்புகளும் நிறைந்த அற்புதமான கடல் பயணங்கள், இன்றைய நவ நாகரிக தொழில்நுட்ப வளர்ச்சியில் இனிமேல் சாத்தியமே இல்லை என்கையில் வெறும் கேளிக்கைகளுக்கான இந்த பயணங்கள் அர்த்தமற்றனவாகவே எனக்குத் தோன்றுகின்றன.
- முற்றும்.
#superstargemini
January 4, 2018
கடற்கனவு 5

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக