கடும் வெயில் நாளுக்கு
முந்தைய இரவொன்றில்
நிறைந்து ததும்பும்
நட்சத்திரங்களுக்கு நடுவில்
சுடர் விட்டே ஆக வேண்டிய
நிர்பந்தத்தில் இருக்கும்
பிறை நிலவின்
வடுக்களுக்குள்
செறிந்திருக்கும் வலிகள்
ஊனக்கண்களுக்கு
ஒருபோதும் தெரிவதில்லை.
அன்பின் பருக்கைகளாலான
அட்சய விதைகளுக்கு
துளிர் விடும் வாய்ப்பு
மறுக்கப்பட்டாக வேண்டுமென்றால்
வான் தாய்ப்பாலின்
கடைசிச்சொட்டும் நீர்த்துத்தான் போகட்டுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக