நுரைத்த நீர் நெளித்து தெளித்து
நாற்றமெடுத்த சுவர்கள் கடந்து
நிரல் நிரையாய் நிறுத்திவைத்த
நெளிவு வண்டிகளின் நெருக்கம் தாண்டி
நெரிசலுக்குள் நுட்பவழி தேடி நுழைந்து
நெடுமூச்சு விட்டு நிமிர்ந்தால்
நடைபாதையில் நாலு ரூபாய்
நார்கம்பிக்கு நாலாயிரம் பேரங்கள்
நகைக்கடையில் நூறாயிர
நெற்றிசுட்டிகளுக்கு நைச்சிய சிரிப்புகள்
நிறைவும் நேர்மையும் இல்லாத
நிலங்களில் நிலைத்திருக்கும் நிம்மதி
நீதியும் நேர்த்தியும் நிறைந்த நாடுகளின்
நிர்க்கதிகளை நேர்ப்படுத்திவிடுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக