"ஏன் எனக்கு இப்படி எல்லாம் நடக்கின்றது" என்கின்ற கேள்விக்குறிக்கும் "எப்படி எனக்கு இப்படி எல்லாம் நடக்கின்றது" என்கின்ற ஆச்சர்யக்குறிக்குமான பதில்களை நம்மால் ஒரு போதும் கண்டடைய முடிவதில்லை. ஒவ்வொரு விலங்கின் ஒவ்வொரு இமை அசைவுக்குமான இடம், பொருள், ஏவலை நிர்ணயிக்கும் பிரபஞ்சத்துக்கு மட்டும் தெரிந்த ரகசியம் அது.
வாழ்வில் எப்போதும் பள்ளி,கல்லூரி,அலுவலகம் என்று 24 மணிநேரங்கள் போதாமல் மும்முரமாய் இருந்துவிட்டு, திருமணத்திற்குப் பிறகான முதலிரண்டு வருடங்களை நினைத்துப்ப்பார்க்கவே இப்போது பயமாகத்தான் இருக்கின்றது.
சமைத்தல், கழுவுதல், கூட்டுதல், துடைத்தல், துவைத்தல் என்று வெறும் வினைச்சொற்களால் நிறைந்து வெறுமை அப்பிக்கிடந்தது அந்தக் காலம்.
என் வாழ்வில் எப்படி என்று தெரியாமலே நடந்த ஒரு ஆச்சர்யமான தருணம் தான் சிங்கப்பூர் தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் அறிமுகம். வாழ்க்கையின் வெறுமையை விரட்டி திறமையின் வாசலைத்திறந்து ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தது.
அங்கு எழுதத்தொடங்கும் முன் பேசத்தான் தொடங்கினேன்.ஒரு சிறிய தோழமையான கூட்டத்தில் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தபோதும் அப்படி ஒன்றும் தைரியமாக செய்து விட வில்லை நான். தயங்கித் தயங்கித் தான் நின்றேன். தவறுகளை மறைத்துக்கொள்ளவும் மன்னிக்கப்படவும் மாணவப்போர்வையும் வேறு இல்லையல்லவா? அங்கிருந்தவர்கள் தந்த ஊக்கத்தினால் தான் தொடர்ந்தேன். இருப்பினும் கூட இன்று வரை கை நடுங்கியபடி தான் பேசிக்கொண்டிருக்கின்றேன்.
பின்பு வாசகர் வட்டம் செல்ல ஆரம்பித்த பின்பும் கூட இப்படித்தான். அங்கே குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புகளைப் பற்றிய நம் பார்வையை பகிர்ந்துகொள்ளவேண்டும். எழுதி வைத்துக்கொண்டு தான் செல்வேன். “நல்ல விஷயம், நீங்க பேசுறத ஒரு பதிவா வச்சுக்குறீங்க” என்று சிலர் பாராட்டியபோது கூட, ”இல்லன்னா நம்மளால கோர்வையா பேச முடியாதே” என்று சிரித்துக்கொணடே என்றாலும் உண்மையைத்தான் சொன்னேன். ஆனாலும் இன்னமும் பேசி முடிப்பதற்கிடையில் என் நாக்கு குழறி விடும்.
(உண்மையில் இந்த கை நடுக்கத்துக்கும் நாக்குழறலுக்கும் நூலகத்தின் AC தான் காரணமாக இருக்குமோ?)
இந்த வருட வாசகர் வட்ட ஆண்டு விழாவில் “காலச்சிறகு” நூலறிமுகத்தை செய்யும்படி சொன்னபோது, “அய்யோ, நானில்லை நானில்லை சாமி” என்று தான் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடினேன். படித்ததை பகிர்ந்து கொள்வது போல தன்னிச்சையான/சுயாதீனமான விஷயமல்ல இது.
நூலறிமுகம் என்பது ஒரு நூலின் விற்பனைக்கான மூலதனம். ஒரு விளம்பரம். அதை செய்வதென்பது வெறும் ஒரு தெரிவல்ல. அது ஒரு பொறுப்பு.
அத்தோடு இயல்பான ஒரு கருத்தையும் ரசனைக்குறைவாக எடுத்துக்கொண்டு விடும் இலக்கிய சர்ச்சைகளைத் தான் தினம் Facebook இல் பார்க்க்கின்றேனே?
தவிரவும் சுமார் 200 பேர் கொண்ட அரங்கத்தில் செய்யவேண்டிய மேடைப்பேச்சு வேறு.
இப்படி பலவாறாக யோசித்து விட்டு, சரி எழுதி வாசித்துவிடலாம் என்று முடிவு செய்தேன். அதற்கு அனுமதி கிடைத்ததும் தான் தைரியம் வந்தது.
காலச்சிறகு நூலை வரி விடாமல் படித்து, ஒரு சனிக்கிழமை அதிகாலை 4 மணிவரை இருந்து பேச்சை தயார் செய்து, கட்டுரையாளர்கள் சிலரிடம் கருத்துக் கேட்டு, பல முறை பேசிப் பார்த்து பதிவு செய்து, சில மாற்றங்கள் செய்து என்று தடபுடலான முன்னேற்பாடுகளுடன் தயாரானேன்.
ஆனால் நிகழ்வுக்கு முதல் நாள் என் முகம் தாங்கிய ஆண்டு விழா அழைப்பிதழை Facebook எங்கும் பார்க்க ஆரம்பித்ததும் மறுபடி கிலி பிடித்தது. மீண்டும் ஒரு முறை பேச்சை சரி பார்த்து மாற்றங்கள் செய்து, மனப்பாடம் ஆவதற்காக பல முறை எழுதியும் பார்த்து ஒரு பெரு மூச்சை இழுத்துப் பிடித்தபடி ஒரு வழியாக மேடை ஏறினேன்.
சில பல கை நடுக்கங்கள் நாக்குழறல்களுடன் பேசி முடித்தேன். எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு இடத்தில் தான் தடுமாறினேன். ஆனால் நான் பயந்ததை விட சிறப்பாகவே பேசினேன். என்ன, நான் ஒரு முறை கூட அரங்கத்தினருக்கு புன்சிரிப்பை தந்ததாகவும் நினைவில்லை, அவர்களில் ஒருவராவது என் பேச்சை ஆமோதித்து தலை அசைத்ததையும் நான் பார்க்கவில்லை. 😂 ஆனால், பேசி முடித்து இழுத்து வைத்திருந்த பெருமூச்சை “அப்பாடா” என்று விட்டு விட்டு திரும்பி வருகையில் கேட்ட பின்னூட்டம் "அடடா, அதிக நேரம் பேசி விட்டோமோ" என்ற குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு பாடத்தையும் உணர்த்தியது. இப்போது வரை மனதிற்குள் என் பேச்சு அனிச்சையாய் edit ஆகிக் கொண்டே இருக்கின்றது.
நான் நன்றாக பேசியதாகத்தான் பலர் சொன்னார்கள். அது சபை நாகரிகமும் கூட இல்லையா? நட்டமே இல்லாத நேர்மறையான முக தாட்சண்யத்தால் தானே அன்பு இன்னும் இந்த அகிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அல்லது முதன் முறை என்பதாலான மன்னிப்பாக இருக்கலாம். இல்லை பேச்சின் உள்ளடக்கம் நன்றாக இருந்திருக்கலாம். ஆனாலும் ஒரு குறையை யாரேனும் சொல்லி விட மாட்டார்களா என்று தான் மனம் ஏங்குகின்றது. அண்ணாவைப் போல, அக்கறையுடன் கூடிய நேர்மையான அறிவுரையை தலையில் குட்டி தரும் ஒரு முன்னவருக்கான தேடல் என்னுள் முளைத்திருக்கின்றது. ஆனால் ஒரு சிறுமியின் “Aunty உங்க voice ரொம்ப அழகா இருந்துது” என்கின்ற பாராட்டு தான் என்னை முற்றிலும் ஆச்சர்யப்படுத்தியது. அந்த குழந்தைமை அழகாகவும் இருந்ததோடு பதற்றத்தை தணித்ததென்றும் சொல்லலாம்.
நூல் தொகுப்பாசிரியர் ஷாநவாஸின் “பண்ணிடலாம் தர்ஷனா, பயப்படாம பேசுங்க” என்கின்ற நம்பிக்கையை காத்திருப்பேன் என்று நினைக்கின்றேன். “எங்கேயாவது ஒரு புள்ளில மேடைப்பேச்ச ஆரம்பிச்சு தானே ஆகணும்” என்கின்ற தன்னம்பிக்கைக்கான ஒரு ஒளி அது.
இலக்கை மட்டும் வைத்துக்கொண்டு, எந்த வித அடையாளங்களும் இன்றி, அடை மொழிகள் துறந்து என் சிந்தனையின் கால்கள் கொண்டு நான் நடந்து செல்லும் பாதையில் நானே எதிர்பாராமல் கிடைத்த ஒரு ஆசிர்வாதமாகவே இந்த வாய்ப்பை உணர்கின்றேன்.
நன்றி ஷா !!

March 7

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக