மசக்கை எனப்படுவது,,,,



நாக்கின் ஒவ்வொரு முனையிலும், 
இடைவெளிகளே இல்லாத 
இடைவெளிகளுக்கிடையேயும்
சுண்டிச் சுழன்றடிக்கும் கசப்பை 
எப்பாடு பட்டாவது செரித்து விட்டு,

கைகளை சுருட்டிக் கொண்டு
கால்களைக் குறுக்கிக் கொண்டு
தலையை குனிந்து 
ஒரு சின்னஞ்சிறு மொச்சைக்கொட்டையாய் 
மீண்டும் உன் கருவறைக்குள்
புகுந்து விட மாட்டோமா என்று
ஏக்கமாக இருந்தாலும்

இந்த கசப்பையெல்லாம் 
உனக்கு இடம் மாற்றி விடும்
தைரியம் கற்பனையில் 
கூட வரவில்லை அம்மா !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக