ஒரு புதினம் தலைமாட்டில் உட்கார்ந்து வஞ்சப்புகழ்ச்சி பாடிக்கொண்டிருந்தது..
ஒரு கவிதையும் கட்டுரையும் ஆளுக்கொரு காலைப்பிடித்தபடி சமர் புரிந்தன.
சில இதழ்கள் சிறுகதைக்கு சாதி ஓவியம் தீட்டி அழகு பார்த்தன.
வெறும் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை குதப்பித் தெறிக்க கேலிச்சித்திரங்கள் நக்கலடித்தன.
ஒரு வெண்பா 'களுக்' என்று நமட்டுசிரிப்பு சிரித்தது.
இதர பல நாவல்கள் கவிதைகள் கட்டுரைகள் சிறுகதைகள் தொடர்கதைகள் நாவல்கள் துணுக்குகள் தத்தம் அறிவுக்கேற்றபடி ஏதேதோ பேசித்தீர்த்தன.
எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கின்றதில்லையா?
ஒரு கட்டத்தில் கடுப்பாகிப்போன சிறுகதை திடீரென்று எழுந்து,
"அடச்சே நிறுத்துங்களடா,
ஒரு சிறுகதைக்கு தூங்குகிற சுதந்திரம் கூட இல்லையா இந்த கேடு கெட்ட சனநாயக நாட்டில்?"
என்று பளார் என்று அறைந்து அத்தனை விமர்சனங்களையும் வெளியேற்றியது.
😳😳😳 !!!
March 27, 2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக