பயணங்கள் எனக்கு எப்போதுமே பிடித்தமானவை. அடிக்கடி பயணிப்பவர்களைப்பார்த்தால் பொறாமையாகக்கூட இருந்திருக்கின்றது.
ஆனால் பிறந்தது ஒரு நாடு புகுந்தது ஒரு நாடு வாழ்வது ஒரு நாடு என்று ஆனபின்பு பயணம் என்றாலே எரிச்சலாக இருக்கும். அதிலும் அந்த ஒருவருட பயணங்கள் ஒட்டு மொத்தமாய் ஒரு விரக்தியையே ஏற்படுத்தி விட்டன. விடுமுறை, குடும்பம், உறவுகள், அதன் சுவாரஸ்யங்கள் என்ற ஆர்வங்களை எல்லாம் தாண்டி ஐயோ இந்த பெட்டி கட்டுகிற வேலை இருக்கின்றதே,அதிலும் வருடந்தோறும் மாற்றி மாற்றி விமானம் ஏறுகிற சலிப்பு அதுவும் கைக்குழந்தையோடு என்கையில் பயணம் என்பதே ஒரு ஒவ்வாமையாக ஆகிவிட்டதென்று தான் சொல்லவேண்டும். அடிக்கடி பயணிப்பவர்களைப்பார்த்தால் இப்போதெல்லாம் பரிதாபமாகத்தான் இருக்கின்றது.
இந்த சலிப்பினால் இந்த சுற்று வட்டார நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்தபோதும் திருமணமான நாட்களில் சென்ற மலேசியா பயணத்திற்கு பின்பு எங்குமே செல்லவில்லை. சுமார் மூன்று வருடங்களாகி விட்டதால் இம்முறை கப்பல் பயணமொன்று செல்லத்தீர்மானித்தோம்.
ஆனால் தயக்கங்கள் இருந்தன. "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" பாடல் குழந்தையுடன் செல்லும் கடல் பயணங்கள் மீது ஒரு பயத்தை ஏற்படுத்தி இருந்தது.கடல் ஒவ்வாமைகள் ஏதேனும் வந்து விட்டால் நடுக்கடலில் என்ன செய்வது என்பது இன்னுமொரு தயக்கம்.நான்கு நாள் பயணத்தில் சுமார் 12 மணி நேரங்கள் மட்டுமே தரை சுற்றுலாக்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலும் ஒரு இடம் நாங்கள் ஏற்கனவே சென்றிருந்த இடம் வேறு. மீதி நேரங்களில் சலிப்பாக இருக்குமோ என்றும் யோசித்தோம்.(இணையத்தளத்தில் இருப்பதெல்லாம் எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் சுவாரஸ்யமாய் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே).
ஆக எப்படியோ ஒரு வழியாய் இந்த தயக்கங்களை புறந்தள்ளி முடிவெடுத்து கிளம்பினோம். தயக்கங்கள் மட்டுமன்றி பயணங்கள் மீதிருந்த சலிப்பையும் தாண்டி எனக்குள் கடல் புறா, ஜலதீபம், யவனராணி என்னும் பல ஞாபகங்கள் சம்பந்தமே இல்லாமல் சந்தோஷமாய் வந்து குதித்தன.
இணையம், தொலைபேசி என்று நவீன உலகின் எந்தவித தொல்லைகளுமில்லாத இயல்பிலும் இயற்கையிலும் இயைந்து கடல் அலைகளின்மீது வானப்போர்வை போர்த்தி வாழப்போகும் அற்புதமான நான்கு நாட்களை எதிர்நோக்கி Super Star Gemini இல் ஏறினோம்.
- தொடரும்
#supetstargemini
March 30, 2017

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக